சிங்கப்பூர் ஊழியர்கள் சிலர் $20,000 வரை மாதச் சம்பளம் பெறுவதை கண்டறிந்த யூடியூப் பிரபலம்

சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் சிலர் அதிக சம்பளம் பெறுவதன் தொடர்பில் அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்றது நாம் அறிந்ததே.

ஹாங்காங்கைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் டோரஸ் பிட், சிலரின் மாதச் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருக்கலாம் என்பதை அண்மைய காணொளி ஒன்றில் கண்டறிந்தார்.

ஹாங்காங்கை முந்தி ஆசியாவின் முன்னணி நிதி நடுவமாக சிங்கப்பூர் உருவெடுத்திருப்பதை அறிந்த அந்தப் பிரபலம், இங்கு ஊழியர்கள் மாதந்தோறும் எவ்வளவுதான் சம்பளம் பெறுகின்றனர் என்பதை அறிய, சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்திற்குச் சென்று சிலரிடம் பேட்டி எடுத்தார்.

மாதச் சம்பளமாக தாங்கள் $20,000 வரை பெறுவதாக சிலர் கூறியதை அறிந்த அந்தப் பிரபலம் வியப்படைந்தார்.

நிறுவனம் ஒன்றில் மின்னிலக்கத் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரியும் ஒருவர் டோரசின் கேள்விக்குப் பதிலளித்தார். தம் உண்மையான சம்பளத்தை வெளியிட மறுத்த அவர், மாதம் $10,000 முதல் $20,000 வரை பெறுவதாக மட்டும் கூறினார்.

டோரசிடம் பேசிய மற்றொரு மாது, வட்டார மேலாளர் பதவியிலிருந்து பயனீட்டாளர் பொருள்கள் துறைக்கு தாம் அண்மையில் மாறியதாகச் சொன்னார். தமது மாதச் சம்பளம் $20,000 என அவர் சொன்னார்.

Remote video URL

சிங்கப்பூரர்களுக்கு இது நல்ல சம்பளமா என்ற கேட்டதற்கு, ‘ஆமாம்’ என்று பதிலளித்த அந்த மாது, நிறுவனங்களில் தமக்கு 18 ஆண்டு அனுபவம் இருப்பதாகக் கூறினார்.

தமது வயதுப் பிரிவில் உள்ள மற்ற ஊழியர்கள் இதே அளவிலான சம்பளம் பெறுவதாகக் குறிப்பிட்ட அந்த மாது, காணொளியில் தமது வயதை வெளியிடவில்லை.

சிங்கப்பூரில் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருப்பதைச் சுட்டிய அவர், வாடகைச் செலவும் அதிகமாக இருப்பதாகச் சொன்னார்.

அந்த மாதின் சம்பளத்துக்கு ஒவ்வொரு மாதமும் அவர் இரண்டு ரோலெக்ஸ் கைக்கடிகாரங்களை வாங்கலாம் என்று டோரஸ் வியப்புடன் கூறினார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த இந்த ஆடவரே, தாம் பேட்டி கண்டவர்களில் அதிகச் சம்பளம் பெறுபவராக இருக்கலாம் என்று டோரஸ் கருதினார். படம்: டோரஸ் பிட்/யூடியூப்

நெதர்லாந்தைச் சேர்ந்த மற்றோர் ஆடவர், சிங்கப்பூரில் தாம் 16 ஆண்டுகளாகப் பணியாற்றுவதாகக் கூறினார்.

தற்போது அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், சம்பள உயர்வு பெற கடுமையாக உழைப்பதுடன் சாமர்த்தியமாகவும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“உங்கள் சகாக்களுக்கு உதவுங்கள், உங்களுக்கு உதவுங்கள், உங்களது நிறுவனம் வளர உதவுங்கள். அதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.

தமது சம்பளத்தை அவர் வெளியிடவில்லை என்றாலும், தாம் பேட்டி கண்டவர்களில் இவரே அதிகச் சம்பளம் பெறுபவராக இருக்கலாம் என்று டோரஸ் கருதினார்.

சிங்கப்பூர் ஊழியர்களுடன் தாம் நடத்திய நேர்காணலின் காணொளித் தொகுப்பை ஜனவரி 3ஆம் தேதி யூடியூப்பில் டோரஸ் பதிவேற்றம் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!