லிட்டில் இந்தியாவில் சில மதுபானக் கடைகளில் விசாரணை

விற்பனை மற்றும் நுகர்வோர் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகள் உட்பட 14 மதுபானக் கடைகளில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12ஆம் தேதி வரை காவல்துறை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

அப்போது விதிமீறல்கள் நடந்தது குறித்து தெரிய வந்தது.

கிளைவ் ஸ்திரீட், டன்லப் ஸ்திரீட்டில் உள்ள நான்கு கடைகளில் வாடிக்கையாளர்கள் கூடி குடிப்பதற்காக மறைவான இடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக நவம்பர் 23ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.

இதுபோன்று கடைகளில் குடிப்பதற்கு அனுமதியில்லை. இத்தகைய மதுபானக் கடைகள் அங்கேயே குடிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை.

மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் உள்ள மதுபானக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரையிலும் சனிக்கிழமை, ஞாயிறு, பொது விடுமுறைக்கு முந்தைய நாள், பொது விடுமுறை ஆகிய நாள்களிலும் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுகிறது.

மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் மதுபானங்களை விநியோகிக்கும் குற்றத்திற்கு 20,000 வெள்ளி வரை அபராதமும் இதே குற்றத்தை மீண்டும் செய்தால் மறுபடியும் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!