திட்டமிடாத கர்ப்பம், கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வு

திட்டமிடாத கர்ப்பத்தைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய விழைவோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வருவதாக சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் (எஸ்எச்பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருக்கலைப்பு செய்வதற்காக அப்பெண்கள் மருத்துவப் பரிந்துரைகளைக் கோரியுள்ளனர்.

2020ஆம் ஆண்டு சிங்கப்பூர்ப் பெண்கள் 340 பேர், கருக்கலைப்பு செய்வதற்காக மகப்பேற்று மருத்துவருக்குப் பரிந்துரைக் கடிதம் கேட்டு, இங்குள்ள எட்டு சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களை நாடினர். 2018ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த விகிதம் 60 விழுக்காடு அதிகம்.

2020ஆம் ஆண்டு அவ்வாறு மருத்துவப் பரிந்துரை கேட்டோரில் 10 விழுக்காட்டிற்குமேலானோர் மீண்டும் மீண்டும் பரிந்துரை கேட்டது ஆய்வில் தெரியவந்தது.

‘அடிப்படை சுகாதாரப் பராமரிப்பில் கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான கண்காணிப்பு’ எனும் தலைப்பிலான ஆய்வு, சிங்கப்பூரில் முதல்முறையாக இடம்பெற்றது.

திட்டமிடாத கர்ப்பத்தால் கருக்கலைப்பை நாடிய பெண்களில் பெரும்பாலோர் ஒற்றையர்கள். 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

மருத்துவப் பரிந்துரை அளிக்கப்பட்ட பெண்களில் ஏறக்குறைய 16 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்று கூறப்பட்டது.

திட்டமிடாத கர்ப்பங்களுக்கு, கருத்தடை முறைகள் குறித்த புரிதல் இல்லாதது காரணமாக இருக்கக்கூடும் என்று எஸ்எச்பி கூறியது.

இளையர்களுக்கு கருத்தடை முறைகள் தொடர்பில் போதிய அறிவு இல்லாத வேளையில், 40 வயதைக் கடந்த பெண்கள் தங்களது கருத்தரிக்கும் திறன் குறைவதாகத் தவறாக எண்ணிக்கொள்வதையும் அதனால் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் நிறுத்திக்கொள்வதையும் எஸ்எச்பி சுட்டியது.

திட்டமிடாத கர்ப்பத்தைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்வதைவிட, மேம்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளை நாடும்படி அது ஆலோசனை கூறியுள்ளது.

கருக்கலைப்பால் ரத்தசோகை ஏற்படுவதுடன் பெண்ணின் கருத்தரிப்புத் திறன் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உண்டு என்பதை எஸ்எச்பி சுட்டியது.

திட்டமிடாத கர்ப்பம் தொடர்பில் மேலும் ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!