இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

அப்பகுதியில் வசிக்கும் 4,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்கு முன்னர் செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் அந்த வெடிகுண்டு பிற்பகல் 1.45 மணிக்கு வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டதாகக் காவல்துறை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

மாலை 5.10 மணியளவில் காவல்துறை வெளியிட்ட மற்றொரு பதிவில், கட்டட கட்டுமான ஆணையம், பொது பயனீட்டுக் கழகம், எஸ்பி குழுமம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகள், வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட கட்டுமானத் தளத்தில் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.

கட்டுமானத் தளம், சாலைகள், அருகிலுள்ள கால்வாய்கள், குழாய் வரிசை, காலியான கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் ஆகியவவை கட்டட அமைப்புமுறைப்படி பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே, குடியிருப்பாளர்கள் வீடு திரும்பலாம் என அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தங்களது வீடுகளில் இருக்க வேண்டாம் எனக் குடியிருப்பாளர்களிடம் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருந்தனர்.

அவர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் செஞ்சா-கேஷு சமூக மன்றமும் ஒன்று.

செவ்வாய்க்கிழமை காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அங்கு சென்று நிலவரத்தைப் பார்வையிட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த சுமார் 100 குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருந்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 40க்கும் அதிகமான அதிகாரிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராணுவம் அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

வெடிகுண்டை வெடிக்கச் செய்வதால் ஏற்படும் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெடிகுண்டைச் சுற்றி மணல் மூட்டைகளையும் கான்கிரீட் பாளங்களையும் கொண்டு பாதுகாப்பு அரணை வீரர்கள் கட்டியெழுப்பியதாக ராணுவம் கூறியது.

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட ஆகப்பெரிய போர்க்கால வெடிகுண்டுகளில் ஒன்றாக நம்பப்படும் 100 கிலோகிராம் எடையுடைய அந்த வெடிகுண்டு, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இரு தடவை வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, பாதிக்கப்பட்ட சாலைகளும் புக்கிட் பாஞ்சாங் மேம்பாலச் சாலையின் ஒரு பகுதியும் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த வெடிகுண்டை முதல்முறையாக வெடிக்கச் செய்தபோது ஏற்பட்ட சத்தம், பிற்பகல் 12.30 மணியளவில் புளோக் 153 கங்சா சாலையிலிருந்து கேட்க முடிந்தது.

வெடிகுண்டை இரண்டாவது முறையாக வெடிக்கச் செய்யும் நடவடிக்கை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செஞ்சா-கேஷு சமூக மன்றத்திலிருந்து வெடிப்புச் சத்தத்தைக் கேட்க முடிந்தது. அதையடுத்து அந்த வெடிகுண்டைப் பரிசோதிக்கும் பணி நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டபோது டௌன்டவுன் ரயில் தடத்தில் இயங்கும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் பேருந்து, ரயில் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் மாலை 5.30 மணியளவில் ஆணையம் வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட வீதிகளில் காலை 10.30 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் சாலைத் தடுப்பு போடத் தொடங்கினர். இந்த ஏற்பாடுகளைப் பற்றி அறியாத வாகனமோட்டிகள் சிலர், தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கையால் கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் பாடங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு அப்பள்ளி மாறியது.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!