வரலாற்றுச் சிறப்புமிக்க உட்லண்ட்ஸ் மரபுடைமைப் பாதைகள்

அனுஷா செல்­வ­மணி

கிட்­டத்­தட்ட 102 ஆண்­டு­கள் நீடித்­தி­ருக்­கும் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க ஆல­ய­மான எண் 25, சுங்கை காடுட் அவென்­யூ­வில் அமைந்­துள்ள ஸ்ரீ அர­ச­கே­சரி சிவன் கோயில், தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் பசு­மை­யும் எழி­லும் மிகுந்த புதிய உண்ட்­லண்ட்ஸ் மர­பு­டை­மைப் பாதை­யில் அங்­கம் வகிக்­கிறது.

அத­னு­டன் சேர்த்து ஸ்ரீ சிவ­கி­ருஷ்ண ஆல­யம் உள்­ளிட்ட உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தைச் சுற்­றிய 15 வர­லாற்று இடங்­கள் அந்­தப் பாதை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

இதற்கு முன்­னர் வேறு இடத்­தி­லி­ருந்து, புதிய இடத்­திற்கு மாற்­றப்­பட்ட ஸ்ரீ அர­ச­கே­சரி சிவன் கோயி­லின் வர­லாற்­றை­யும் பெரு­மை­யை­யும் பொது­மக்­கள் ஒரு மணி நேர மிதி­வண்டி சவா­ரி­யிலோ இரண்­டரை மணி­நேர நடைப்­ப­ய­ணத்­திலோ கண்டு ரசிக்­க­லாம்.

உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தைப் பற்றி மேலும் அறிய தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் அதன் 23வது மர­பு­டை­மைப் பாதையை இம்­முறை உட்­லண்ட்­ஸில் அமைத்­துள்­ளது.

உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தின் வர­லாற்றை நினை­வூட்­டும் வண்­ணத்­தில் ராணுவ வர­லாறு, சமூ­கங்­கள், வழி­பாட்­டுத் தலங்­கள், நவீன வட்­டா­ர­மாக உரு­வெ­டுத்த விதம் ஆகிய பாதை­கள் உட்­லண்ட்­ஸின் பரி­மாண மாற்­றத்­தைக் காட்­டும்.

இரண்­டாம் உல­கப் போர் இடம்­பெற்ற சம­யத்­தில் இந்த வடக்கு வட்­டா­ரத்­தி­லுள்ள கட­லோர, ஆற்­றங்­கரை குடி­யேற்­றங்­களும் அவை நம் நாட்­டின் வர­லாற்­றுக்கு எவ்­வாறு பங்கு வகித்­தது என்­ப­தை­யும் இதன்­மூ­லம் அறி­ய­லாம்.

உட்­லண்ட்ஸ் சமூ­கங்­கள், போரில் இருந்த உட்­லண்ட்ஸ், இயற்கை வனப்பு மிகுந்த உட்­லண்ட்ஸ் என மூன்று விதங்­களில் நம்மை அழைத்­துச் செல்­ல­வி­ருக்­கும் இந்­தப் பாதை­களில், பொது­மக்­கள் மிதி­வண்டி ஓட்டி அல்­லது நடந்து செல்­ல­லாம்.

'உட்­லண்ட்ஸ் எட் வார்' பாதை­யா­னது, அட்­மி­ரல்ட்டி பூங்­கா­வாக மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்ள கடந்­த­கால ராணு­வத் தளங்­க­ளின் பின்­ன­ணியை நமக்கு எடுத்­துக்­காட்­ட உள்ளது.

கடை­சிப் பாதை­யான 'கம்­யூ­னிட்­டிஸ் ஆஃப் உட்­லண்ட்ஸ்' பாதை, வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பல சமய வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­ல­வி­ருக்­கின்­றன.

ஸ்ரீ சிவ­கி­ருஷ்ண ஆல­யம், கிராஞ்சி போர் கல்­லறை, புகழ்­பெற்ற மார்­சி­லிங் உண­வங்­காடி நிலை­யம் முத­லிய இடங்­களும் இவற்­றில் இடம்­பெற்­றுள்­ளன.

நேற்­றி­லி­ருந்து தொடங்­கப்­பட்ட இந்­தப் பாதை­க­ளின் வரை­ப­டத்­தை­யும் துணை வழி­காட்­டி­க­ளை­யும் பொது­மக்­கள், www.roots.gov.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் காண­லாம். துணை வழி­காட்­டி­களை, உட்­லண்ட்­ஸில் இருக்­கும் அனைத்து சமூக மன்­றங்­க­ளி­லும், சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொ­ரு­ள­கம், ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கம், தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் தலை­மை­ய­கம் ஆகி­ய­வற்­றி­லும் காணலாம்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!