மின்சார கார் பதிவு கூடியது

2020ஆம் ஆண்டைவிட 20 மடங்கு அதிக பதிவுகள்; இப்போது 3,600 மின்சார கார்கள்

சிங்­கப்­பூ­ரில் புதிய மின்­சார வாக னப் பதிவு இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் தொடர்ந்து அதி­க­ரித்­தது. இப்­போது புதி­தாக பதி­யப்­படும் அனைத்து கார்­க­ளி­லும் இத்­த­கைய கார்­க­ளின் விகி­தாச்­சாரம் 8.1% ஆக இருக்­கிறது.

இது சென்ற ஆண்டு முழு­வ­தற்­கு­மான அள­வை­விட இரண்டு மடங்­கிற்­கும் அதி­கம்.

மின்­சார கார்­களின் பதிவு 2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 20 மடங்கு கூடி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது ஏறத்­தாழ 3,600 மின்­சார கார்­கள் ஓடு­கின்றன. கிட்­டத்­தட்ட 2,500 மின்­னேற்றிக் கூடங்கள் இருக்­கின்­றன என்று போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று தெரி­வித்­தார். மின்­கண்­கா­ணிப்பு பற்­றிய சிங்­கப்­பூர் பசு­மைத் திட்ட கலந்­துரை­யா­ட­லில் அவர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­டல் 2021ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. கரி­மக் கழி­வு­க­ளைக் குறைத்­துக்­கொள்­வதற்­கான முயற்சி­களை சிங்­கப்­பூர் முடுக்­கி­விட்டு இருக்­கும் நிலை­யில், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த சிங்­கப்­பூரைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வும் தீர்­வு­க­ளைக் காண்­பது இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் நோக்­கம்.

அடுத்த 10 ஆண்­டில் சிங்­கப்­பூர் தன்­னு­டைய எரி­சக்­தித் துறையை கரிமம் அல்­லாத துறை­யாக மாற்று ­வ­தற்கு அதிக வாய்ப்­பு­கள் இருப்­பதாக டாக்­டர் கோர் கூறினார்.

போக்­கு­வ­ரத்துத் துறை­யைப் பொறுத்­த­வரை, எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தும் வாக­னங்­க­ளுக்குப் பதி­லாக மின்­சா­ரத்­தைப் பயன்­படுத்­தும் வாக­னங்­க­ளுக்கு மாறிக் கொள்­வது முக்­கிய அணு­கு­மு­றை­யாக இருக்­கும் என்றாரவர்.

மின்­சார கார் பதி­வு­க­ளைப் பார்க்­கும்­போது இந்த மாற்­றத்­திற்கு நல்ல வர­வேற்பு இருப்­ப­தற்­கான அறி­குறி தெரி­கிறது என்று அவர் கூறினார்.

மின்­சார வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு உத­வும் வகை­யில் இப்­போ­தைய விதி­மு­றை­களைப் போக்­கு­வ­ரத்து அமைச்­சும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வொரு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக கார்பேட்டை யிலும் 2025ஆம் ஆண்டு வாக்­கில் பல மின்­னேற்றிக் கூடங்­கள் இருக்கும் என்று டாக்­டர் கோர் குறிப்­பிட்­டார்.

மின்­சா­ரத்தை ஏற்­றிக்கொண்­ட­தும் தங்­கள் வாக­னத்தை உட­னடி­யாக அப்­பு­றப்­ப­டுத்­தும்படி பய­னீட்­டா­ள­ருக்கு ஊக்­க­மூட்­டக்­கூ­டிய தீர்­வு­களை முன்­வைக்­கும்­படி சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மின்னேற்றிக் கூடங்­க­ளைப் பொறுப்­புள்ள முறை­யில் பயன்­படுத்திக்கொள்ளும்­படி வாகன உரி­மை­யா­ளர்­களை அமைச்சர் வலி­யுறுத்­தி­னார்.

அத்­த­கைய கூடங்­களில் அளவுக்கு அதிக நேரம் வாக­னங்­களை நிறுத்­தி­வைக்க வேண்­டிய தேவையைத் தவிர்த்­துக்கொள்ளும்­வகையில் திட்­ட­மிட்டு செயல்­ப­டு மாறும் அவர் உரி­மை­யா­ளர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!