தற்காப்பு உறவை மறுஉறுதி செய்த சிங்கப்பூர், அமெரிக்கா

சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உறவு நேற்று முன்­தி­னம் மறு­உ­றுதி செய்துகொள்ளப்பட்டது.

அமெ­ரிக்­கா­வுக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கும் பிர­த­மர் லீ சியன் லூங், அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்­சின் தலை­மை­ய­க­மான பென்­ட­க­னில் அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்­சர் லோய்ட் ஆஸ்­டி­னைச் சந்­தித்­துப் பேசி­னார்.

ஆசிய பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கப் படை­கள் இருப்­பது முக்­கி­யம் என்று சந்­திப்­பின்­போது உறுதி செய்­யப்­பட்­டது.

உக்­ரேன் மீது ரஷ்­யப் படை­யெ­டுப்பு பற்­றி­யும் திரு லீயும் திரு ஆஸ்டினும் கலந்­து­ரை­யா­டி­னர்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் தடை­களை விதித்­தற்­கான கார­ணங்­க­ளைப் பற்றி திரு ஆஸ்­டி­னி­டம் பிர­த­மர் லீ பகிர்ந்­து­கொண்­டார்.

உக்­ரேன் போர் தொடர்­பாக சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் நிலைப்­பாட்­டுக்கு திரு ஆஸ்­டின் நன்றி தெரி­வித்­தார்.

பென்­ட­க­னுக்கு வரு­கை­தந்த பிர­த­மர் லீக்கு அமெ­ரிக்க ராணுவ மரி­யாதை அளிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே மிக உன்­ன­த­மான நீண்­ட­கால இரு­த­ர­ருப்பு தற்­காப்பு உறவு இருந்து வரு­வதை திரு லீ சுட்­டி­னார்.

இந்­தத் தற்­காப்பு உறவு சிங்­கப்­பூர்-அமெ­ரிக்கா பங்­கா­ளித்­து­வத்­தின் முக்­கிய அம்­சம் என அவர் கூறி­னார்.

"ஆசிய பசிஃ­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கப் படை­கள் தொடர்ந்து இருந்­தால் அவ்­வட்­டா­ரத்­தில் அமைதி, நிலைத்­தன்மை, செழிப்­பு­ நிலை ஆகி­யவை தொடரும் என்று சிங்­கப்­பூர் மிக உறு­தி­யாக நம்­பு­கிறது.

"ஆசி­யா­வில் அமெ­ரிக்­கப் படை­கள் தொடர்ந்து இருந்து வரு­வதை சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆத­ரிக்­கும்," என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரு ஆஸ்­டின் சிங்­கப்­பூ­ருக்கு அறி­மு­கப் பய­ணம் மேற்­கொண்­டார்.

அமெ­ரிக்­கா­வின் முக்­கிய தற்­காப்­புப் பங்­கா­ளி­களில் சிங்­கப்­பூ­ரும் அடங்­கும் என்று நேற்று முன்­தி­னம் அவர் கூறி­னார்.

இந்தோ-பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கப் படை இருப்­ப­தற்கு சிங்­கப்­பூர் வழங்­கும் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது என்­றார் அமைச்­சர் ஆஸ்­டின்.

இந்தோ-பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் அமைதி நில­வு­வதை உறுதி செய்ய அமெ­ரிக்கா-சிங்­கப்­பூர் ராணுவ ஒத்­து­ழைப்பு உதவி இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

விண்­வெளி ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தம்

சிங்­கப்­பூர் நேற்று முன்­தி­னம் ஆர்­டி­மிஸ் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டது.

இதன்­மூ­லம் பொறுப்­பான விண்­வெளி ஆராய்ச்­சிக்­கான வழி­காட்டி­ நெ­றி­மு­றை­களை முன்­வைக்­கும் அனைத்­து­லக ஒப்­பந்­தத்­தில் சேரும் 18வது நாடாக சிங்­கப்­பூர் திகழ்­கிறது.

இந்த ஒப்­பந்­தத்­துக்கு அமெ­ரிக்கா தலைமை தாங்­கு­கிறது.

ஆர்ட்­டி­மிஸ் ஒப்­பந்­தத்­தில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கையெ­ழுத்­திட்­டார்.

விண்­வெ­ளித் துறை­யில் அமெ­ரிக்­கா­வைப் போல ஒரே மனப்­

பான்­மை­யைக் கொண்ட நாடு­

க­ளு­டன் இணைந்து செயல்­பட சிங்­கப்­பூர் விரும்­பு­வ­தாக அமைச்சர் கான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!