சிங்கப்பூரில் உலக நாடுகளின் விமான சாகசக் கண்காட்சி

உலகம் முழு­வ­தும் உள்ள விமா­னத் துறை, ராணு­வம், அர­சாங்­கம் ஆகிய­வற்­றின் அதி­கா­ரிகள், வர்த்­த­கர்­கள், பார்­வை­யா­ளர்­க­ளை­ஈர்க்­கும் சிங்­கப்­பூ­ரின் விமா­னக் கண்­காட்சி நாளை தொடங்­கு­கிறது.

கிரு­மிப் பர­வல் தொடங்­கிய பிறகு சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­படும் மாபெ­ரும் நிகழ்ச்சி இது. இதில் பொது­மக்­கள் பங்­கேற்க அனு­ம­தி­யில்லை. ஆனால் இணை­யம் வழி யாக நேர­டி­யாக ஒளி­ப­ரப்ப ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடத்­தப்­படும் இந்த விமா­னக் கண்­காட்சி, பிப்­ர­வரி 18ஆம் தேதி வரை நான்கு நாட்­க­ளுக்கு நீடிக்­கும். ஏறக்­கு­றைய 39 நாடு ­க­ளைச் சேர்ந்த 600 நிறு­வ­னங்­ களின் 13,000க்கும் மேற்­பட்ட வர்த்­த­கப் பேராளர்கள் இதில் பங்­கேற்­ கின்றனர்.

2020ல் நடத்­தப்­பட்ட விமா­னக் கண்­காட்­சி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது குறைவு. இருந்­தா­லும் உல­கின் பல முன்­னணி நிறு­வ­னங்­கள் இதில் பங்­கேற்­கின்­றன.

2020ல் 110 நாடு­க­ளை­யும் இவ்­வட்­டா­ரத்­தை­யும் சேர்ந்த 30,000க்கும் மேற்­பட்ட வர்த்­த­கப் பேராளர்கள் பங்­கேற்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரின் விமா­னக் கண்­காட்சி, கொவிட்-19 புதிய நடை­மு­றை­களை சோதனை செய்­வ­தற்­கான 'மைஸ்' எனப்­படும் (Mice- Meetings, Incentives, Conference, Exhibition) நிகழ்­வு­களில் ஒன்­றாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

கண்­காட்­சி­யில் பங்­கேற்­ப­வர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும். முன்­ப­திவு செய்­தி­ருக்க வேண்­டும். சாப்­பி­டு­வ­தற்கு தனி இடம் ஒதுக்கப் ­பட்­டிருக்க வேண்டும், எல்லா இடங்­க­ளும் கிருமி நாசி­னித் தெளித்து அடிக்­கடி சுத்­தம் செய்­ய வேண்டும் உள்­ளிட்ட கொவிட்-19 நடை­மு­றை­கள் பின்­பற்­றப்படவிருக் கின்றன.

இவ்­வாண்டு 'ஏர்­பஸ்', சீனா­வின் விமா­னத்துறை கார்ப்­ப­ரே­ஷன், போயிங், இஸ்­ரே­லிய விண்­வெளி தொழில்துறை, லாக்­ஹீட் மார்ட்­டின், ரஃபேல் டிஃபன்ஸ் சிஸ்­டம்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், தேல்ஸ், துருக்கி விண்­வெ­ளித் துறை, உள்­ளூ­ரின் எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் உட்­பட பல உல­கப் புகழ்­பெற்ற நிறு­வ­னங்­கள் பங்­கேற்­கின்­றன.

சாங்கி கண்­காட்சி நிலை­யத்­தில் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய 'எக்ஸ்­பீ­ரியா இவென்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்­வாக இயக்­கு­நர் லெக் செட் லாம், கிரு­மிப்­ப­ர­வல் சூழ்­நி­லை­யால் பங் கேற்­பா­ளர்­கள் குறை­வாக இருப்­ப­தாக தெரி­வித்­தார்.

இத­னால் விமா­னக் காட்­சி­யின் தரம் பாதிக்­கப்­படாது என்­றார் அவர்.

உல­கின் 20 முன்­னணி விமான நிறு­வ­னங்­களில் 70 விழுக்­காட்­டுக்கு மேல் காட்சியில் பங்­கேற் ­ப­தை அவர் சுட்டிக்காட்டினார்.

விமா­னச் சாகசம் பிப்­ர­வரி 15 முதல் 18 வரை தின­மும் நேர­டி­யாக இணை­யம் வழி ஒளி­ப­ரப்பப்படும்.

இந்­திய விமா­னப் படை­யின் இல­கு­ரக போர் விமா­ன­மான தேஜா­சும் சாக­சங்­க­ளைக் காட்­ட­வி­ருக்­கிறது.

அது மட்­டு­மல்­லா­மல் ஏர்­பஸ்­ஸின் 'A350-1000' விமா­ன­மும் போயிங்­கின் அக­ல­மான 'B777-9' விமா­ன­மும் முதல் முறை­யாக இதில் அறி­மு­கம் காண்­கின்­றன.

2018ஆம் ஆண்­டின் விமா­னக் காட்­சி­யில் கடை­சி­யாக பங்­கேற்ற இந்­தோ­னீ­சி­யா­வின் 'ஜூபிட்­டர்' ஆகாய சாக­சக் குழு, இம்­முறை ஆறு விமான வடி­வங்­களை செய்து காட்­ட­வி­ருக்­கிறது.

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யின் 'F-16C', 'AH-64D' அப்­பாச்சி ஹெலி­காப்­டர்­கள், அெமரிக்­கா­வின் கடற்­துறை நிறு­வ­னத்­தின் 'F-35B Lightning II', அமெ­ரிக்க விமா­னப் படை­யின் 'B-52 Stratofortress' குண்டு வீசும் விமா­னம் ஆகி­ய­வை­யும் ஆகாயக் காட்சிக்கு தயாராக உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!