நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அண்­மைய ஆண்­டு­களில் அதி­க­ரித்­து­வ­ரு­வ­தாக தேசிய சிறு­நீ­ரக அற­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

இந்­தப் போக்கு அக்­க­றை­க் கு­ரி­யது என அற­நி­று­வ­னம் சொன்­னது.

மூன்று மாதங்­க­ளுக்கு மேலாக ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ரக நோய் இருந்­தால், அவர் நாட்­பட்ட சிறு­நீ­ரக நோயாளி என கரு­தப்­ப­டு­வார்.

சிங்­கப்­பூ­ரில் நாட்­பட்ட சிறு­

நீ­ரக நோய்க்கு நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்­தம் ஆகி­யவை

முக்­கிய கார­ணங்­கள் எனக் கூறப்­பட்­டது.

இந்த இரண்­டுமே சிங்­கப்

­பூ­ரர்­க­ளி­டையே பர­வ­லாக இருப்­ப­தால், மூன்­றில் இரு­வ­ருக்கு நாட்­பட்ட சிறு­நீ­ரக நோய் ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக அற­நி­று­வ­னத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் பேஹ­ரம் அலி கான் விவ­ரித்­தார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.

சிகிச்சை பெற மாதந்­தோ­றும் 100க்கு மேற்­பட்ட விண்­ணப்­பங்­கள் கிடைப்­ப­தாக அற­நி­று­வ­னம் கூறி­யது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்த எண்­ணிக்கை 60ஆக இருந்­தது.

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் சிகிச்­சைக்­காக வரும் சிறு­நீ­ரக நோயாளிக­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தேசிய பல்­

க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை சிறு­நீ­ர­க­வி­யல் பிரி­வின் தலை­வர் துணைப் பேரா­சி­ரி­யர் ஜிம்மி டியோ குறிப்­பிட்­டார்.

நாட்பட்ட சிறு­நீ­ரக நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க வாழ்க்கை முறை­யில் மாற்­றங்­கள் செய்­வது அவ­சி­யம் என மருத்­து­வர்­கள் ஆலோ­சனை வழங்­கி­னர். உடற்­ப­யிற்சி செய்­வது, உடல் எடை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­பது, புகை­பி­டிப்­பதை நிறுத்­து­வது போன்ற மாற்­றங்­கள் மூலம் சிறு­நீ­ரக நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­லாம்.

அதோடு, அவ்­வப்­போது சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­க­ளுக்­குச் செல்­ல­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!