நோவாவெக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியின் செயல்திறன்

கொவிட்-19 பெருந்­தொற்­றி­லி­ருந்து மக்­க­ளைக் காப்­ப­தற்கு 'நோவா­வெக்ஸ்' தடுப்­பூ­சியை அவர்­கள் தங்­கள் தெரி­வு­களில் ஒன்­றா­கத் தேர்வு செய்­ய­லாம்.

இது குறித்து வாச­கர்­க­ளுக்கு இருக்­கும் சில கேள்­வி­க­ளுக்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் தனது 'ஆஸ்க் எஸ்டி' பகுதி மூலம் பதி­ல­ளிக்­கிறது.

கேள்வி: இந்­தத் தடுப்­பூ­சி­யின் பெயர் என்ன?

பதில்: 'நோவா­வெக்ஸ்' தடுப்­பூசி அல்­லது 'நோவா­வெக்ஸ்' என்று அழைக்­கப்­ப­டு­கிறது. தடுப்­பூ­சி­யின் தொழில்­நுட்ப பெயர் NVX-CoV2373 ஆகும். இது ஐரோப்­பா­வி­லும் இந்­தி­யா­வி­லும் இரண்டு வெவ்­வேறு இடங்­களில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. ஐரோப்­பா­வில், இது 'நுவெக்­ஸோ­விட்' என்ற பெய­ரில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில், இது கோவோ­வெக்ஸ் என்ற பெய­ரில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

கேள்வி: இந்­தத் தடுப்­பூ­சியை உரு­வாக்­கிய நாடு எது?

பதில்: நோவா­வெக்ஸ் தடுப்­பூ­சியை அமெ­ரிக்­கா­வில் உள்ள மேரி­லாந்­தில் உள்ள ஓர் உயிர் தொழில்­நுட்ப நிறு­வ­னம் உரு­வாக்­கி­யது.

கேள்வி: இது ஓர் எம்­ஆர்­என்ஏ (mRNA) தடுப்­பூ­சியா? இது எப்­படி வேலை செய்­கிறது?

பதில்: நோவா­வெக்ஸ் தடுப்­பூசி என்­பது புரத அடிப்­ப­டை­யி­லான அல்­லது புர­தத்­தின் துணைப் பகு­தி­யின் தடுப்­பூசி ஆகும். இது எம்­ஆர்­என்ஏ தடுப்­பூசி அல்ல.

கேள்வி கொவிட்-19க்கு எதி­ராக நோவா­வெக்ஸ் எவ்­வ­ளவு பய­னுள்­ள­தாக இருக்­கிறது?

பதில்: உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் கூற்­றுப்­படி, லேசான, மித­மான மற்­றும் கடு­மை­யான நோய்­களுக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் 90 விழுக்காடு ஆகும்.

கேள்வி: தடுப்­பூசி சிங்­கப்­பூ­ரில் கிடைக்க வாய்ப்­புள்­ளதா?

பதில்: சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின் ஒரு பகுதி­யாக நோவா­வெக்ஸ் தடுப்­பூசி அங்­கீ­க­ரிக்­கப்­படும் என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­க­ளின் இயக்­கு­நர் இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக் கடந்த புதன்­கி­ழமை கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் செய்­தி­யா­ளர் கூட்டத்தில் மிக­வும் நம்­பிக்­கை­யு­டன் தெரி­வித்­தார்.

கேள்வி: எம்­ஆர்­என்ஏ அல்­லாத தடுப்­பூ­சி­களை இங்கே காப்­பூ­சி­களா­கப் (பூஸ்­டர்) பயன்­ப­டுத்த முடி­யாது என்று கேள்­விப்­பட்­டேன். நோவா­வெக்ஸ் ஒரு பூஸ்­ட­ராக அனு­ம­திக்­கப்­ப­டுமா?

பதில்: பூஸ்­டர் திட்­டத்­திற்கு எம்­ஆர்­என்ஏ அல்­லாத மாற்று தடுப்­பூசி­யாக நோவா­வெக்ஸ் கிடைக்­கும் என்று தான் நம்­பு­வ­தாக பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

ஏனென்­றால், இங்­குள்ள வேறு சில எம்­ஆர்­என்ஏ அல்­லாத தடுப்­பூ­சி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், நோவா­வெக்ஸ் தடுப்­பூசி டெல்டா மற்­றும் ஓமிக்­ரான் வகை­க­ளுக்கு எதி­ராக மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும் என்­பதை இன்­றைய சான்­று­கள் காட்­டு­கின்­றன என்று பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

ஆனால் இங்­குள்ள கொவிட்-19 தடுப்­பூசி நிபு­ணர் குழு முத­லில் நோவா­வெக்ஸ் தடுப்­பூசி தொடர்­பான விவா­தங்­களை முடித்து தடுப்­பூசி குறித்த பரிந்­து­ரை­களை வழங்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!