$3 செலவிட்டவருக்கு அடித்தது யோகம்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மீன் நூடல்ஸ் சூப் விற்று வந்த 70 வயது சோவ் மெங் செங், கனவிலும் எதிர்பார்க்காத பரிசு ஒன்றை வென்றுள்ளார்.

இணைய விற்பனைத் தளமான ‘லஸாடா’வின் மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கலில், $1 மில்லியன் மதிப்பிலான கொண்டோமினிய வீடு ஒன்றை இவர் வென்றார்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் 11.11 விற்பனை நிகழ்வில் திரு சோவ் செலவிட்டார். இவர் செலவிட்ட தொகை ஏறக்குறைய $3.

அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்துகொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கச் சாவிகளைச் சேகரிக்க வேண்டும். அதற்கு, லஸாடா செயலியில் ‘லேஸி ஸ்டார்’ என்று அழைக்கப்படும் விளையாட்டு ஒன்றை ஆடவேண்டும். சில நடவடிக்கைகளையும் அவர்கள் நிறைவுசெய்ய வேண்டும்.

தங்கச் சாவிகளைச் சேகரிக்க சேகரிக்க, கொண்டோமினிய வீட்டை வெல்வதற்கான வாய்ப்பும் கூடும்.

தம் மகள் அறிமுகப்படுத்திய இந்த விளையாட்டை ஆடி ஐந்து தங்கச் சாவிகளைத் தாம் வென்றதாக திரு சோவ் கூறினார்.

“மாபெரும் பரிசை வென்றிருப்பது என்னால் இன்னும் நம்பமுடியவில்லை! தொடக்கத்தில், நான் வீடு வென்றதாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது இது ஒரு மோசடி என்று நான் நினைத்தேன். வாழ்வில் இந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டமாக உணர்ந்ததில்லை,” என்றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!