பாலர்பள்ளி ஆசிரியர்கள் நலன் காக்க பரிந்துரைகள்

ஈராண்டுகளுக்கு முன்னர், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பும் (இசிடிஏ) சுகாதார மேம்பாட்டு வாரியமும் வேலையிடப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து வேலை சுகாதார, பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொண்டன.

10 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 280 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பணிகளும், அவர்கள் பணியாற்றும் சூழலும் மேலும் சில அம்சங்களும் ஆசிரியர்களின் நலனில் தாக்கம் ஏற்படுத்தும் என இசிடிஏ தெரிவித்தது.

குறிப்பாகச் சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்ட மேசை நாற்காலி போன்றவை ஆசிரியர்களுக்கு ஏற்றதாக இருக்காது என்று கூறப்பட்டது. இதனால் அவர்கள் கால் முட்டி களுக்குத் தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

ஆசிரியர்களுக்கு, அவர்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட மேசை நாற்காலிகளை வழங்கவும், நிர்வாக வேலைகளைக் குறைக்கக் கூடுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

உரக்கப் பேசி பாடம் நடத்த வேண்டிய சூழல்களில் குரல் பாதிப்பைத் தவிர்க்க ஆசிரியர்களுக்குக் குரல் பயிற்சி வழங்கவும் பாலர் பள்ளிகளுக்குப் கூறப்பட்டது.

பாலர் பள்ளி ஆசிரியர்களின் வேலை மனநிறைவு, நலன், செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் திரு மசகோஸ் ஸூல்கிஃபிலி, இந்தப் பரிந்துரைகளை நேற்று ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் அட் யுங் ஆன்’ பாலர்பள்ளியில் நிகழ்ந்த ஆசிரியர் தின மெய்நிகர் சந்திப்பில் அறிவித்தார்.

இந்தப் பரிந்துரைகள், நான்கு முக்கிய பகுதிகளான வேலையிட சுகாதார, பாதுகாப்பு மேம்பாட்டையும் பணியாளர்களுக்கு ஏதுவான வேலையிடத்தை உருவாக்குதலையும் நிர்வாக வேலைகளை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு அதிகரிப்பையும் பணியாளர்களின் உடல், மனநல மேம்பாடு குறித்தும் வழங்கப்பட்டன.

ஆய்வில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டபோதிலும் பெரும்பாலோர் தங்களது வேலையிடத்தையும் உடன் பணியாற்றுவோரிடையே உள்ள நட்புறவுக் குறித்தும் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த பாலர் பள்ளிகளுக்குச் சில திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
உதாரணத்துக்குப் பாலர் பருவ, பயிற்சி சேவை சங்கம் மேசை நாற்காலிக்கு விலை குறைவு வழங்குகின்றது.

‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் அட் யுங் ஆன்’ பாலர்பள்ளியில் மாண வர்களின் வருகையைப் பதிவு செய்யவதற்கும் பெற்றோருடன் தொடர்பு கொள்வதற்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதிக பாலர் பள்ளிகள் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள தாம் ஊக்குவிப்பதாக அமைச்சர் மசகோஸ் ஸூல்கிஃபிலி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!