பாதுகாப்பான உணவு குறித்து ஆராய என்டியு ஆய்வுக்கூடம்

இறைச்சி உணவு வகை­க­ளுக்கு மாற்­றாக, செயற்கை அணுக்­கள் உத­வி­யு­டன் தயா­ரிக்­கப்­படும் இறைச்சி உணவு வகை­யி­லி­ருந்து நீர்ப்­பாசி பானம் வரை­யி­லான புது­வகை உணவு வகை­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், இது­போன்ற செயற்கை புர­தச்­சத்து உணவு வகை­கள் உண்­ப­தற்கு பாது­காப்­பா­ன­து­தானா என்­பதை முத­லில் கண்­ட­றிய வேண்­டும்.

இந்த நோக்­கத்­தில்­தான், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்டியு) ஆய்­வுக்­கூ­டம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பாது­காப்­பா­ன­தாக இருக்­கும்­வரை சிங்­கப்­பூர் இது­போன்ற புர­தச்­சத்து உடைய உணவு வகை­களை நீடித்த நிலை­யில் பெற முடி­யும்.

"உண்­ணக்­கூ­டிய நிலை­யில் இல்­லை­யெ­னில், பாது­காப்­பான உணவு முறை இல்லை," என அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உணவு, அறி­வி­யல் தொழில்­நுட்­பத் திட்ட இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் வில்­லி­யம் சென் கூறி­யுள்­ளார்.

'ஃபியூச்­சர் ஃபுட் சேஃப்டி ஹப்' என்னும் அந்த ஆய்­வுக்­கூ­டம் புது­வகை உண­வு­க­ளின் பாது­காப்­புத் தன்­மையை மதிப்­பீடு செய்­யும்.

இதன்­மூ­லம், உள்­ளூர், வெளி­நாடு வேளாண்-உணவு நிறு­வ­னங்

­க­ளுக்கு தேவைப்­படும் ஆத­ரவை வழங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிறு­வ­னங்­க­ளின் உணவுப் பொருட்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்கி அவை மனித பயன்­பாட்­டுக்கு தயா­ராவதை உறுதி செய்ய உணவு பாது­காப்பு தொடர்­பான பிரச்­சி­னை­களை விரைந்து தீர்க்க இங்­குள்ள விஞ்­ஞா­னி­கள் பணி­

பு­ரி­கின்­ற­னர்.

இந்த ஆய்­வுக்­கூ­டத்­தில் பணி­யாற்­றும் ஆய்­வா­ளர்­களில் முதன்­மை­யா­ன­வர் பேரா­சி­ரி­யர் வில்­லி­யன் சென். புதிய உணவு வகை­க­ளின் பாது­காப்­புத்­தன்­மையை மதிப்­பி­டும் முறை இது­வரை சிங்­கப்­பூ­ரில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று கூறு­கி­றார்.

"உண­வுப் பாது­காப்பு தொடர்­பான முயற்­சி­களை நாம் அதி­க­ரித்து வரும் வேளை­யில், நீர், நிலத்­தி­லி­ருந்து கிடைக்­கும் உணவு வகை­க­ளி­லி­ருந்து செயற்­கை­யாக உரு­வாக்­கப்­படும் உணவு வகை­கள் வரை மேலும் மேலும் பல­வி­த­மான உணவு வகை­கள் தோன்­றும்.

"எனவே, இந்த உணவு வகை­கள் மக்­கள் பயன்­பாட்­டுக்கு வரு­முன் அவற்­றின் பாது­காப்­புத்­தன்­மையைப் பரி­சோ­திக்க சரி­யான கட்­ட­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டும்," என்று பேரா­சி­ரி­யர் சென் விளக்­கி­னார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­

க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் உணவு முகவை, ஏ* ஸ்டார் எனப்­படும் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆராய்ச்சிக் கழகம் ஆகி­ய­வற்­றின் கூட்டு முயற்­சி­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதை நேற்று தொடங்கி வைத்­தார் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­ச­ரான கிரேஸ் ஃபூ.

தொடர்ந்து பேசிய பேரா­சி­ரி­யர் சென், உணவு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஆலோ­ச­னைப் பணி, ஆராய்ச்­சிப் பணி­கள் மூலம் தமது ஆய்­வுக்­கூ­டத்­து­டன் இணைந்து பணி­யாற்­ற­லாம் என்று கருத்­துத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!