பொருளியல்: நம்பிக்கை அறிகுறிகளும் நிதான அணுகுமுறையும்

முரசொலி

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் நில­வ­ரங்­கள் கொஞ்­சம் நிம்­மதிப் பெரு­மூச்சு விடும் அள­வுக்­குத் திரும்பி இருக்­கின்­றன. ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக இறங்­கு­மு­க­மா­கவே இருந்து வந்த பொரு­ளி­யல், இந்த ஆண்டின் முதல் காலாண்­டில் கொஞ்­சம்­ தலை நிமிர்ந்து இருக்­கிறது.

2021 ஜன­வரி முதல் மார்ச் வரைப்­பட்ட மூன்று மாத காலத்­தில் பொரு­ளி­யல் 0.2% வளர்ச்சி கண்டு இருக்­கிறது என்­பது வர்த்­தக தொழில் அமைச்­சின் முன்­னோட்டக் கணக்­கீ­டு­கள் மூலம் தெரியவந்து­உள்­ளது. இந்­தக் கணக்­கீ­டு­கள், முதல் இரண்டு மாத நில­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யிலானவை என்­றா­லும்­ பொரு­ளி­யல் ஏறு­மு­க­மா­கத் திரும்பி இருக்­கிறது என்ற செய்தி காதில் தேனாக இனிக்­கிறது.

இது­வ­ரை­ இறங்­கியே வந்த பொரு­ளி­யல் அந்த நிலை­யில் இருந்து மாறி ஆக்­க­க­ர­மாக ஏறத்­தொடங்கி இருக்­கிறது என்­றா­லும் மீட்சியைப் பார்க்­கை­யில் இன்­னு­ம் எச்­ச­ரிக்கைக இருக்­க­வேண்­டிய தேவை இருப்­ப­தையே நிலவரங்கள் காட்டுகின்றன.

பல துறை­க­ளி­லும் மீட்சி ஏற்­ற இறக்கமாக இருக்­கிறது. ஒரு துறை வளர்­கிறது, மறு துறை தேய்­கிறது. அதா­வது உற்­பத்­தித்­துறை 7.5% வளர்ச்சி கண்டு இருப்பதாகத் தெரியவந்­துள்ள நிலை­யில், கட்டு­மா­னத்­துறை -20.2% வீழ்ந்­து­விட்­ட­தாக நில­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன. இது மலைக்­கும் மடு­வுக்­கும் இடைப்­பட்ட நிலை­யைப் போல் இருக்­கிறது.

சேவைத் துறை­யும் நிமி­ர்ந்து வரு­கிறது. 2020 கடைசி மூன்று காலாண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் இந்த ஆண்­டில் இதுவரை அந்­தத் துறை வளர்ந்­த­பா­டில்லை, 1.2% இறக்­கம் கண்­ட­ நி­லை­யில்­தான் இருக்­கிறது. என்றா லும் முன்பைவிட அது மேம்பட்டு இருக்­கி­றது.

சேவைத் துறைக்கு உள்­ளே­யும் ஏற்ற இறக்­கம் இருப்பதைக் குறிப்­பி­டத்­தான் வேண்­டும். தக­வல்­தொ­டர்பு, நிதி, நிபு­ணத்­துவச் சேவை­கள் 3.7% வளர்ந்து உள்­ளன. ஆனால் இதர சேவைத் துறை­கள் இன்­ன­மும் படுத்தே கிடக்­கின்­றன.

எல்­ல­ாவற்­றை­யும் கருத்­தில் கொண்டு பல பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கணிப்­பதைப் பார்த்­தால், நம்­பிக்கை மேலும் அதி­க­ரிக்­கிறது. இந்த ஆண்­டின் முதல் மூன்று மாத காலத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய வளர்ச்சியைவிட, பின் வரும் மாதங்­களில் இடம்­பெ­றும் வளர்ச்­சி­ அதிகமாகவே இருக்­கும் என்று அவர்கள் சொல்­கி­றார்­கள்.

ஆண்­டுக்கு ஆண்டு என்ற அடிப்­ப­டை­பில் பார்த்­தால் 2021 இரண்­டா­வது காலாண்­டில்-அதா­வது ஏப்­ரல் முதல் ஜூன் வரைப்­பட்ட மூன்று மாதங்­களில்- பொரு­ளி­யல் வளர்ச்சி ஈரி­லக்க அள­வில் இருக்­கும் என்­பது அவர்­க­ளின் கணிப்­பு.

ஆகைல் வளர்ச்சி மித­மா­னதாக இருக்­கும் என்­றா­லும் பொரு­ளி­யல் தொடர்ந்து ஏறு­மு­க­மா­கவே­தான் இருக்­கும் என்ற முடி­வுக்கு வரு­வ­தற்கு ஏற்ற நில­வ­ரங்­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன. சேவைத் துறை வளர்ச்சி பரந்­த­ அ­ள­வில் இருக்­கும் என்­றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நில­வ­ரங்­கள் ஒரு­பு­றம் இருக்­கட்­டும். சிங்­கப்­பூ­ருக்கு வெளியே நில­வும் சூழ்நி­லை­களைக் கவ­னித்­தால் அவை­யும் சாத­க­மாக இருப்­ப­தா­கத் தெரி­கிறது. அமெ­ரிக்­கா­வில் நிதித்­துறை விரி­வடை­கிறது. ஆசிய பசி­பிக் வட்­டா­ரம் அதிக வளர்ச்சி அடையும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த வட்டாரம் 2020ல் 1.5% இறங்­கி­யது. அது இந்த ஆண்­டில் 7.6% வளர்ச்சி காணு­ம் என்று அனைத்­து­லக பண நிதி­யம் கணித்து இருப்­பதை இங்கு குறிப்­பி­டு­வது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

இவை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­ய­லுக்கு ஊக்­கம் கிடைக்­கும் என்று நம்­ப­லாம்.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம்­கூட தனது ஏப்ரல் மாதக் கொள்கை அறிக்­கை­யில் இதையே குறிப்­பிட்டு உள்­ளது. சிங்­கப்­பூ­ருக்கு வெளியே பொரு­ளி­யல் தேவை­கள் அதி­க­மா­கும் போக்கு இருப்­ப­தால் இந்த ஆண்­டின் எஞ்­சிய காலத்­தில் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் சூடு­பி­டிக்­கும்;

பொரு­ளி­யல் முழு மூச்­சில் செயல்­படும் அள­வுக்­கு மேம்­ப­ட­ாது என்­றா­லும் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அர­சாங்­கம் கணித்­துள்ள அள­வைத் தாண்­டும் வாய்ப்பு இருப்­ப­தாக ஆணை­யம் முன்­னு­ரைத்­துள்­ளது. பொரு­ளி­யல் இந்த ஆண்­டில் 4% முதல் 6% வரை வளர்ச்சி காணும் வாய்ப்பு இருப்­ப­தாக அதி­காரபூர்­வ­ கணிப்­பு­கள் கூறு­கின்­றன.

தனிர் துறை­யைச் சேர்ந்த பொரு­ளி­யல் வல்லு நர்­கள் பல­ரும் இவ்­வாறே சொல்­கி­றார்­கள். எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் மார்ச் மாதம் 12.1% கூடி இருப்பதை அடுத்து இந்த ஆண்டுக்கான ஏற்றுமதிகள் அதிகமாக இருக்கும் என்று பகுப்பாய் வாளர்கள் சொல்கிறார்கள்.

இப்­ப­டிப்­பட்ட நில­வ­ரங்­கள் நம்­பிக்கை தரு­பவை க, ஊக்­க­ம­ளிப்­பவைக உள்­ளன. இருந்­தா­லும் எல்­லாம் சர­ள­மாக, எதிர்­பார்க்­கப்­படுவதைப்­போல நடக்­கும் என்­ப­தற்­கான உத்­தரவாதங்­கள் எது­வும் இல்லை என்­ப­தை­ கவ­னிக்க­வேண்­டும்.

உலக அள­வில் நிச்­ச­யமில்­லாத பல பொரு­ளியல் நில­வ­ரங்­கள் இருந்­து­ வ­ரு­வ­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் தனிர் துறை பொரு­ளில் வல்­லு­நர்­களும் எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள் என்­பதை அலட்­சி­யப்­ப­டுத்­தி­விட முடிது.

சிங்­கப்­பூர் அதி­க­மாக பொரு­ளி­யல் தொடர்­பு­களைக் கொண்­டுள்ள, வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டக்­கூ­டிய நாடுகளில் பல­வற்­றில் கொவிட்-19 தொற்று மறு­ப­டி­யும் தலை காட்­டு­கிறது; தடுப்­பூசி பற்­றாக்­குறை வாய்ப்­பும் இருக்­கிறது; எல்­லை­கள் திறக்­கப்­ப­டு­வது தாமதமடை­ய­லாம்; புதிய வகை கிரு­மி­கள் தலை தூக்­க­லாம்;

உல­களா­விய நிதி அமைப்­பு­கள் செய்­யும் காரி­யங்­கள் மூலம் எதிர்­பா­ராத பாத­கச் சூழ­லும் ஏற்­ப­ட­லாம்; அமெ­ரிக்­கா­வில் பங்­குச்­சந்தை முறி­களில் எதிர்­பார்க்கப்­படுவதைவிட அதிக வரு­வாய் கிடைக்­கக்­கூ­டிய நிலை ஏற்­ப­ட­லாம் என்று அனைத்­து­லக பண நிதி­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

இப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் இருந்து முத­லீ­டு­கள் அமெ­ரிக்கா பக்­கம் திரும்ப ஊக்­கம் கிடைக்­கும். இந்த வட்­டா­ரத்­தில் வங்­கி­கள் வட்டி விகி­தங்­களை அதி­க­ரிக்­கும் என்­றெல்­லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் உத்தேசித்துதான் சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நாணய பரிவர்த்தனை விகிதக் கொள்கையில் மாற்றம் செய்மல் நிலவரங் களுக்கு ஏற்ப அதை வைத்துள்ளது.

கரணம் தப்பினால் மரணம் என்ற இப்போதைய உலகப் பொருளியல் சூழலில் மிகவும் எச்சரிக்கையுடன், விவேகத்துடன் மிகவும் நேர்த்தியாக காய்களை நகர்த்தவேண்டிய பொறுப்பு, முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக இருப்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டால் அது பொருளியலுக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும் என்பது திண்ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!