இந்தோனீசியாவில் அதிபர், அமைச்சர்கள், பழைய நண்பர்களைச் சந்திக்கும் விவியன்

இவ்­வட்­டார நாடு­க­ளுக்கு சூறா­வ­ளிப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் நேற்று இந்­தோ­னீ­சி­யா­வில் அந்­நாட்டு வெளி ­யு­றவு அமைச்­சர் ரெட்னோ மர்­சு­டி­யைச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடை­யி­லான வலு­வான உறவை மறு­வு­று­திப்­ப­டுத்­து­வதே அமைச்­சர் விவி­யன் பய­ணத்­தின் நோக்­க­மா­கும்.

நேற்று மாலை 5.40 மணி­ய­ள­வில் இரு அமைச்­சர்­களும் சந்­தித்­துப் பேசி­னர். இதை­ய­டுத்து கூட்டு மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர்­கள் பேசி­னர்.

திரு ரெட்னோ தனக்கு அனுப்­பி­யி­ருந்த இந்­தோ­னீ­சிய பாரம்­ப­ரிய தின்பண்டத்தின் படத்தை அமைச்­சர் விவி­யின் நேற்று ஃபேஸ்புக் பதி­வில் வெளி­யிட்­டி­ருந்­தார். ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருந்த சிங்­கப்­பூர் பேரா­ளர்­களை ஆச்­ச­ரி­ய­மான முறை­யில் வர­வேற்­கும் விதத்­தில் தின்பண்டங்களை திரு ரெட்னோ அனுப்­பி­யி­ருந்­தார்.

இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வை­யும் பழைய நண்­பர்­க­ளை­யும் சந்­திக்­கப் போவ­தாக பதி­வில் அவர் கூறி­யி­ருந்­தார்.

நேர­டி­யாக அவர்­க­ளைச் சந்­திக்க ஆவ­லு­டன் இருக்­கி­றேன் என்­று கண் ­ம­ருத்­து­வ­ரு­மான டாக்டர் விவியன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

வெளி­யு­றவு அமைச்சு புதன்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் கொள்­ளை­நோ­யி­லி­ருந்து மீண்டு வரும் சூழ­லில் இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான இரு தரப்பு நெருக்­க­மான உறவைப் பலப்­ப­டுத்­து­வதே பய­ணத்­தின் நோக்­கம் என்று தெரி­வித்­தது.

ஜகார்த்­தா­வில் கடல்­துறை விவ­கா­ரம் மற்­றும் முத­லீ­டு­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் லுஹுட் பண்ட்­ஜய்­டான், பொரு­ளி­யல் விவ­கார ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஏர்­லங்கா ஹர்­டார்டோ, நிதி அமைச்­சர் ஸ்ரீ முல்­யானி இந்­தி­ரா­வதி, எண்­டர்­பி­ரைஸ் அமைச்­சர் எரிக் தோஹிர், பய­ணத்­துறை மற்­றும் புத்­தாக்க பொரு­ளி­யல் அமைச்­சர் சான்­டியகா உனோ ஆகி­யோரை திரு விவி­யன் சந்­திப்­ப­தாக சிங்­கப்­பூர் அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

ஜகார்த்தா ஆளு­நர் ஏனிஸ் பஸ்­வெ­டா­னை­யும் மற்ற முக்­கிய இந்­தோ­னீ­சிய பிர­மு­கர்­க­ளை­யும் அவர் சந்­திக்­க­வி­ருக்­கி­றார்.

ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ள மியன்மார் விவகாரம் குறித்து விவாதிக்க ஆசியான் தலைவர்கள் உயர்மட்ட கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் யோசனை கூறியுள்ள வேளையில் டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கு சென்றுள்ளார். இந்தோனீசிய பயணத்துக்கு முன்பு ஆசியானின் தற்போதைய தலைவரான புருணை மற்றும் மலேசியாவுக்கு அமைச்சர் சென்றிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!