டிரேஸ்டுகெதர்’ கருவி விநியோகம் விரைவில் மீண்டும் தொடங்கும்

சிங்கப்பூரில் 4.2 மில்லியனுக்கும் அதிக மக்கள் அல்லது சிங்கப்பூர்வாசிகளில் சுமார் 78 விழுக்காட்டினர் இப்போது டிரேஸ்டுகெதர் கருவிகளை அல்லது செயலியைப் பயன்படுத்துகிறார்கள் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவர்களில் சுமார் 2 மில்லியன் பேர் தங்கள் கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ள செயலியை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இருந்தாலும் கருவிகளுக்கு அதிக தேவை இருக்கிறது. சமூக நிலையங்களில் அந்தக் கருவிகள் தீர்ந்துவிட்டன. என்றாலும் விரைவில் மீண்டும் அவை விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலைப் பணிக் குழுவின் இணைத் தலைவருமான திரு வோங், நேற்று மன்றத்தில் தாக்கல் செய்த தமது அமைச்சர்நிலை அறிக்கையில், டிரேஸ்டுகெதர் செயல் திட்டம் பற்றி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.

டிரேஸ்டுகெதர் கருவிகளுக்கு இந்த அளவிற்கு அதிக தேவை இருக்கும் என்று அரசாங்கம் தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. டிரேஸ்டுகெதர் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பதே இதற்கான காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கருவிகளைத் தயாரிப்பதிலும் கொஞ்சம் தாமதம் இருந்தது. ஆகையால் எல்லா சமூக நிலையங்களுக்கும் தேவையான அளவிற்கு அவற்றை விநியோகிக்க இயல வில்லை. இதுவரையில் கருவிகளைப் பெறாத பள்ளிக்கூட மாணவர்களுக்கும் அவை விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் மன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது என்றாலும் டிரேஸ்டுகெதரும் சேஃப்என்ட்ரி செயல்திட்டமும் சிங்கப்பூரின் தடமறியும் முயற்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று கூறிய அமைச்சர் இந்தத் திட்டங்களுக்காக $10 மில்லியன் செலவாகியுள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!