புக்கிட் பாஞ்சாங்கில் மாறுவேட, பாடல் போட்டிகள்

தமிழில் பாடி, நடித்து அசத்திய இளம் தமிழ்ப் பிரியர்கள்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி, மாலை 2 முதல் 6 மணி வரை புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாக பாடல், மாறுவேடப் போட்டிகளைச் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்தது.

புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் சிறுவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மனாக வேடமிட்டு வீர வசனங்களைப் பேசிய ஜெமின் தொடக்கப்பள்ளியைச் சார்ந்த அனன்யா சதீஷ், 9, தொடக்கநிலை 1 முதல் 3 பிரிவில் வென்றார். படம்: ரவி சிங்காரம்

வீரபாண்டிய கட்டபொம்மனாக வேடமிட்டு வீர வசனங்களைப் பேசிய ஜெமின் தொடக்கப்பள்ளியைச் சார்ந்த அனன்யா சதீஷ், 9, தொடக்கநிலை 1 முதல் 3 பிரிவில் வென்றார். “உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என உணர்ச்சி பொங்க கேட்டார்.

பாரதியாராக வேடமிட்டு பாரதியின் சரித்திரத்தைப் படைத்த பீக்கன் பள்ளி மாணவர் செந்தில்குமார் ஸ்ரதேஷ், 11, தொடக்கநிலை 4 முதல் 6 பிரிவில் வென்றார்.

பாரதியாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ‘அச்சமில்லை’ முழக்கத்தைக் கேட்டுத்தான் எனக்கு மேடையில் பேசும் தைரியம் வந்தது. அவர் கூறிய கருத்துகளை என் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தலாம் என நான் சிந்திப்பேன்.
பாரதியாராக வேடமிட்ட செந்தில்குமார் ஸ்ரதேஷ், 11

இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றார் கண்ணகியாக பாண்டிய அரசனிடம் ஆவேச முழக்கமிட்ட அங் மோ கியோ தொடக்கப்பள்ளி மாணவி இளமாறன் யாழினி, 12.

“பிள்ளைகளின் நடிப்பார்வத்தைப் பாராட்டவேண்டும். தமிழில் நன்றாக பேசி நடித்தார்கள். இந்நிகழ்ச்சி தமிழை வளர்த்தது,” என்றார் மாறுவேடப் போட்டிகளுக்கான நடுவர் அதிபதி அனைத்துலக நாடக நிறுவனர் நவின்நேசன்.

பாடல் போட்டிகளில் தொடக்கநிலை 1 முதல் 3 பிரிவில் பீக்கன் தொடக்கப்பள்ளியின் தமிழ்வானன் ஷான்வி, 7, முதல் பரிசை வென்றார். ‘நாட்டின் எதிர்காலமே சிறுவர்களை நம்பியுள்ளது’ என்ற கருத்தை அவர் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்ற பாடல் பாடித் தெரிவித்தார்.

‘மெட்டுப் போடு’ பாடலைப் பாடி இரண்டாம் பரிசை வென்றார் வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி மாணவர் ஆரவ் பிரவீன், 7.

‘மெட்டுப் போடு’ பாடலைப் பாடி இரண்டாம் பரிசை வென்ற வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி மாணவர் ஆரவ் பிரவீன், 7. படம்: ரவி சிங்காரம்

தொடக்கநிலை 4 முதல் 6 பிரிவு பாடல் போட்டியில் ஸ்ருதி நாகராஜன் நாயர் வென்றார்.

தொடக்கநிலை 4 முதல் 6க்கான பிரிவு பாடல் போட்டியில் ஸ்ருதி நாகராஜன் நாயர் வென்றார். படம்: ரவி சிங்காரம்

புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத் தன்னார்வப் பாடல் குழுவின் பாடகர்களும் சிறுவர்களையும் பெற்றோரையும் இசைமழையில் நனையவைத்தனர்.

புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத் தன்னார்வப் பாடல் குழுவின் பாடகர்கள் இசைமழையைப் பொழிந்தனர். படம்: ரவி சிங்காரம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!