அறிவியல் மையம்: படைப்பாற்றலை தூண்டும் வகையில் ஒரு பயணம்

ஒரு அறையை பிரகாசமாக அமைக்க சூரிய சக்தியால் இயங்கும் விளக்கை தயார் செய்ய ஆர்வம் உண்டா? பிற்காலத்தில் விஞ்ஞானியாக வேலை செய்ய ஆசை உண்டா? அப்படியென்றால், அறிவியல் மையத்தில் ஏப்ரல் 13இலிருந்து ஏப்ரல் 21 வரை நடக்கும் நிகழ்சிகளுக்கு செல்லுங்கள்!

‘படைப்பாற்றலைத் தூண்டுவது: சமூகத்தை உற்சாகப்படுத்துதல்’ என்ற கருப்பொருள் அடிப்படையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

பிரச்சினைகளை தீர்க்கும் திறன்களையும், சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் வழிமுறைகளையும் கற்று அறிவீர்கள். இந்நிகழ்ச்சிகள், உற்சாகத்துடன் இருக்கும் ‘உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை தினத்தின்’ வழிக்காட்டிகளால் நடத்தப்படும். 

இம்மாதத்தின் கடும் வெயிலில் இருந்து ஓய்வு எடுக்க ஆம்னி-திரையரங்கில் ‘கிட்ஸ் என்ற பூனையின் சாகசங்கள்’ என்ற படத்தை ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27 தேதிகளில் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள். 

‘நயாசாவிலிருந்து வரும் கிட்ஸ்’ என்ற விண்வெளி பூனையின் சாகசக் கதைகளையும் அத்தேதிகளில் கேட்டு உற்சாகமடையுங்கள். 

பிற்காலத்தில் விஞ்ஞானியாக வேலை செய்ய ஆசைப்படும் சிறுவர்களுக்கு ஒரு நற்செய்தி! 

ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 அன்றைய தேதிகளில், ‘டிஎன்ஏ தினத்தை’ தன் குடும்பத்தோடு கொண்டாடுங்கள். மரபியல் உலகத்தைப் பற்றி பல சுவாரசியமான செய்திகளையும் பரிசோதனைகளையும் பற்றி ‘டிஎன்ஏ ஆய்வகத்தில்’ கற்று அறியுங்கள். 

இத்தேதிகளில் காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் கேளிக்கைச் சந்தை நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளுங்கள்.   

அது மட்டுமல்லாமல், பல தரப்பட்ட கண்காட்சிகள், பரிசுகள், உற்சாகத்தை தூண்டும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேல் விவரங்களுக்கு அறிவியல் மையத்தின் இணையதளத்தை நாடலாம்.

1. காட்சிக்கூடம் டெமோ

பங்கேற்பாளர்கள்: எல்லா வயதினரும் 

தேதி: ஏப்ரல் 21 வரை(வார இறுதி நாட்களில் மட்டும்)  

நேரம்: காலை 11- நண்பகல் 3

இடம்: கிட்ஸ்டாப் கண்காட்சி 

பதிவு செய்யும் தொகை: கிட்ஸ்டாப் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசம் 

2. வைரல் பயணம் கண்காட்சி 

பங்கேற்பாளர்கள்: எல்லா வயதினரும்

தேதி: ஏப்ரல் 5- மே 10

நேரம்: காலை 10 - இரவு 9 

இடம்: சாங்கி விமான நிலையம், முனையம் 3, அடித்தளம் 2

3. உலகம் படைப்பாற்றல் மற்றும் புதுமை தினம் 2024

பங்கேற்பாளர்கள்: எல்லா வயதினரும் 

தேதி: ஏப்ரல் 13-ஏப்ரல் 21

நேரம்: காலை 10.30- நண்பகல் 4.30(பல்வேறு நேரங்கள்)

இடம்: அறிவியல் மையம் சிங்கப்பூர், ஹால் ஜி, நிலை 2

பதிவு செய்யும் தொகை: அறிவியல் மையம்  பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசம். 

4. டிஎன்ஏ தினத்தை கொண்டாடுவோம்!

பங்கேற்பாளர்கள்: எல்லா வயதினரும் 

தேதி: ஏப்ரல் 20-ஏப்ரல் 21

நேரம்: காலை 10- மாலை 5

இடம்: டிஎன்ஏ ஆய்வகம் மற்றும் டிஎன்ஏ தாழ்வாரம்

பதிவு செய்யும் தொகை: அறிவியல் மையம்  பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசம். 

5. விண்வெளிப் பூனையான ‘கிட்ஸ்’ சந்திக்கவும்!

பங்கேற்பாளர்கள்: ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 

தேதி: ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 27

நேரம்: காலை 10- மாலை 6

இடம்: ஆம்னி-தியேட்டர்

பதிவுசெய்யும் தொகை: $14

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!