சிங்கப்பூரே வணக்கம்!

சின்னஞ் சிறிய நாடிது!

சிறந்து விளங்கும் நாடிது!

சின்ன சின்னத் தீவுகள்

சுற்றிப் பார்க்க அழகுதான்!

சுற்று லாவைப் வளர்த்திடும்!

சுத்த மான நாடிது!

சுற்றுப் புறங்கள் யாவையும்

உற்று வியக்கச் செய்திடும்!

அமைதி யான நாடிது!

அரவ ணைக்கும் நாடிது!

அல்லும் பகலும் இயங்கிடும்

ஆற்றல் மிகுந்த நாடிது!

பசுமை நிறைந்த நாடிது!

பார்த்து மகிழும் நாடிது!

பல்லி னங்கள் வாழ்ந்திடும்

பலரும் போற்றும் நாடிது!

கப்பல் கட்டும் நாடிது!

கற்றுச் சிறந்த நாடிது!

கப்பல் வந்து சென்றிடும்

கடல் வணிகம் பெருக்கிடும்!

உழைப்பால் உயர்ந்த நாடிது!

உணர்வால் இணைந்த நாடிது!

இமையைப் போல காத்திடும்

இன்ப மான நாடிது!

அறங்கள் வளர்க்கும் நாடிது!

திறன்கள் கூட்டும் நாடிது!

அருமை யான நாட்டிலே

அன்பு தானாய் மலருமே!

உலகம் போற்றும் நாடிது

உழைப்பை மதிக்கும் நாடிது

உறுதி யோடு தீரமாய்

உணர்வு கொண்டு வாழ்த்துவோம்!

சீர்காழி உ செல்வராஜு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!