‘வணிக வேட்டை’யில் இளம் தொழில்முனைவர்கள்

முதலீடு, புதிய அறிமுகங்கள், ஆலோசனைகள்: இவை அனைத்தையும் ஒரே மேடையில் பெற்று மகிழ்ந்தனர் வணிக வேட்டை 2024ன் இளம் தொழில்முனைவர்கள்

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழர் பேரவை இளையர் பிரிவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து ‘வணிக வேட்டை’ சவாலுக்கு ஏற்பாடு செய்தன.

அதில் பங்குபெற்ற 20 வணிகக் குழுக்கள், கடந்த சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 4.15 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் மூன்று அனுபவமிக்க நீதிபதிகள், 200 பார்வையாளர்களின் முன்னிலையில் தங்கள் வணிகங்களைப் படைத்தன.

வணிகங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகளின் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளைச் சார்ந்தவையாக அமைந்தன.

நீடித்த நிலைத்தன்மை கொண்ட பரதநாட்டிய உடைகள், உபகாரச் சம்பளம் தேடித்தரும் செயலி, ஆயுர்வேத உணவகம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள், தற்காப்புக் கலைகளை மறு உயிர்ப்பிக்கும் பயிற்சியகம் என இளையர்களின் புத்தாக்கச் சிந்தனைகள் வியப்பூட்டின.

முதல் பரிசாக $2,000 காசோலையை வென்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர்களான 17 வயது ராஜீவ், தன்வின் இருவரும் செயற்கை நுண்ணறிவு மூலம் மறுசுழற்சிக்கான பொருள்களை தனித்தனியாகப் பிரிக்கும் திட்டத்தைப் படைத்தனர்.

மறுசுழற்சி என்பது எதிர்காலத் தேவைக்கு முக்கியமான ஒன்று. லாபத்தையும் தாண்டி உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்.
முதல் பரிசு வென்ற ராஜீவ் (17), தன்வின் (17).

இரண்டாம் பரிசாக $1,500 காசோலையை வென்ற என்டியு மாணவர் ஆனந்தராஜன் ஆர்த்தி, 21, பெண் சுகாதாரப் பொருள்களை ரசாயனங்களின்றி தயாரிப்பதைப் பற்றிப் படைத்தார்.

இது தன் நெடுநாள் கனவு என்றும் நடுவர்களில் ஒருவரான ‘டைமண்ட் கிளாஸ்’ வணிகத் தோற்றுநர் டாக்டர் கேசவன் சத்தியமூர்த்தி, இவ்வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆர்வங்காட்டியது தனக்கு மகிழ்ச்சியளித்தது என்றும் கூறினார் ஆர்த்தி.

இரண்டாம் பரிசான $1,500 காசோலையை வென்ற என்டியு மாணவர் ஆனந்தராஜன் ஆர்த்தி, 21, பெண் சுகாதாரப் பொருள்கள் குறித்த வணிகத்தைப் படைத்தார். படம்: ரவி சிங்காரம்

டாக்டர் கேசவன் பல வணிகங்களுக்கும் புதிய வெளிநாட்டு இணைப்புகளையும் வழங்கவுள்ளதாகக் கூறினார். மேலும், சில வணிகங்களில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்டுமானத்தில் பலதரப்பினரையும் இணைக்கும் தளத்தைப் படைத்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர் குழுவில் முதலீடு செய்யத் தயாராக இருந்தார் ‘டைமண்ட் கிலாஸ்’ வணிகத் தோற்றுநர் டாக்டர் கேசவன் சத்தியமூர்த்தி. படம்: ரவி சிங்காரம்

மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீவத்சன், 20, ஆதித்யா, 22, உணவகங்களின் விநியோகிப்பாளர்களை ஒரே தளத்தில் இணைக்கும் செயலியைப் படைத்தனர்.

மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீவத்சன், 20, ஆதித்யா, 22, காலாவதியாகவிருக்கும் உணவுகளைப் புத்தாக்கமாகக் கையாளும் உத்தியைக் கையாண்டனர். படம்: வணிக வேட்டை செயற்குழு

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், “தொழில்முனைவர்கள் தங்கள் தனித்துவத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும்,” என அறிவுறுத்தினார்.

நீதிபதிகள், சிண்டா தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரனுடன் தமிழர் பேரவை இளையர் பிரிவின் துணைத் தலைவர் செந்தில் ஆண்டியப்பன் (வலமிருந்து இரண்டாவது), என்டியு தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் சந்துருவேல் (வலம்). படம்: வணிக வேட்டை செயற்குழு

ஜனவரி 28ஆம் தேதி தேநீர் கலந்துரையாடலுடன் தொடங்கிய வணிக வேட்டை, பிப்ரவரியில் மூன்று பயிலரங்குகளையும் நடத்தியது.

“இளையர்கள் வணிகத்தில் பல பரிமாணங்களை எடுக்க வணிக வேட்டை உதவுகிறது,” என தமிழர் பேரவை இளையர் பிரிவின் துணைத் தலைவர் செந்தில் ஆண்டியப்பன் கூறினார்.

“தமிழ் இலக்கியத்திலும் வணிகம் பற்றி கூறப்பட்டுள்ளது,” என என்டியு தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் சந்துருவேல் கூறினார்.

உலகப் பொருளியல் மன்றம் 2019ல் நடத்திய ஆய்வின்படி, 17% சிங்கப்பூர் இளையர்களே தொழில்முனைவர்களாக வர விரும்புவதாகவும் இதை மாற்ற வணிக வேட்டை துணைபுரிவதாகவும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!