அதிகமான சமூக ஊடகப் பயன்பாட்டால் இளையர்களின் மனநலனுக்கு ஆபத்து

இளையர்கள் மத்தியில் அதிகரித்துவரும் சமூக ஊடகப் பயன்பாடு அவர்களது மனநலனைப் பாதிக்கக்கூடுமென அமெரிக்க ராணுவ மருத்துவச் சேவையின் தலைவரான விவேக் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளும் சிறாரும் பயன்படுத்துவதற்கு சமூக ஊடகம் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்யும் ஆய்வுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து.

அறிவாற்றலின் வீரியம் அதிகமிருக்கும் சிறு வயதுகளில் அதீத சமூக ஊடகப் பயன்பாடு சிறுவர்களின் மேம்பாட்டிற்குத் தடையாக விளங்க வாய்ப்பு உள்ளது என்கிறார் டாக்டர் விவேக் மூர்த்தி.

ஆகையால், அரசாங்கங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் சமூக ஊடகப் பயன்பாட்டின் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதன் நன்மைகளை அதிகரித்து, குறைகளைக் குறைக்கும் வழிகளைத் தேட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

சிங்கப்பூரிலும் இளையர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும் போக்கு பரவலாகி வருகிறது. 

தொடக்கப்பள்ளி மாணவர்கள்கூட கைத்தொலைபேசிவழி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது.

ஆசிரியர்களும் மாணவர்களுடன் இச்சமூக ஊடகங்களின் வாயிலாக உரையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் இளையர்கள் பலரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்ததால், அதிக அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போக்கு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்ப பலரும் சிரமப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகத் தாக்கத்தால் பல இளையர்கள் உளவியல் ரீதியான உதவி கோரி உளவியலாளர்களை நாடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பக்கல்வி பட்டயப் படிப்பு மாணவியான தியா இஸ்லாமுக்கு சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

20 வயதான இவர், காணொளிகளைத் தயாரித்து இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றுகிறார்.

இதனால், ஒரு நாளில் உறங்கும் நேரம் தவிர பெரும்பாலான நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்பழக்கம் அவரது மனநலனைச் சற்று பாதித்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

“தொடர்ந்து சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது, என் காணொளிகளைப் பின்தொடருபவர்களுக்கு அடுத்து எந்தக் காணொளிகளைத் தயாரிக்கலாம் என்பது போன்ற எண்ணங்களே என் மனத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது,” என்று தியா கூறினார்.

சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது கடினம் என்று அவர் கருதுகிறார்.

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவதால், அதன் இருண்ட பக்கத்தைப் பார்த்துள்ள தியா, தனது 15 வயதுத் தங்கை அதிகமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தன்னுள் பயத்தை ஏற்படுத்துவதாகக் கூறினார்.     

இத்தகைய பிரச்சினைகளைக் கையாள அவ்வப்போது சமூக ஊடகங்களிலிருந்து நீண்ட இடைவெளிகள் எடுத்துக்கொள்வது உதவக்கூடுமென வல்லுநர்கள் கூறுகின்றனர். இது இளையர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பொருந்தும்.

மேலும், சமூக ஊடகச் செயலிகளில் இடம்பெற்றிருக்கும் ‘குறுகிய திரை நேரம்’ போன்றவற்றின்வழி சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என அவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். 

பிள்ளைகள் சமூக ஊடகங்களில் பார்க்கும், கேட்கும், கற்கும் கருத்துகளைப் பற்றி பெற்றோர்களுடன் வெளிப்படையாகப் பேசும் சூழலை இல்லங்களில் ஏற்படுத்துவது அவசியம். இளையர்களுக்கு உதவுவதில் இது முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!