சற்று ‘காது’ கொடுத்துக் கேளுங்கள்; செவிப்புலன் முக்கியம்

அனுஷா செல்­வ­மணி

உட­லில் ஏற்­படும் பெரும்­பா­லான உபாதை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் தரு­வது தொடர்­பில் மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் நம் காது­க­ளுக்கு அதே அளவு முக்­கி­யத்­து­வம் தரு­கி­றோமா என்­பது கேள்­விக்­கு­றியே. ஒரு சிறு உறுப்­பாக இருந்­தாலும் செவித்­தி­ற­னின்றி வாழ்க்கை சிக்­க­லா­ன­தாக இருக்­க­லாம்.

‘கொக்­லி­யர் லிமி­டெட்’ எனும் மருத்­து­வச் சாதன நிறு­வ­னம், பல ஆண்டு­களாக செவிப்­பு­லன் சாத­னங்­களை உற்­பத்­தி­யும் விநி­யோ­க­மும் செய்து வரு­கிறது.

இந்­நி­று­வ­னம் அண்­மை­யில் நடத்­திய ஆய்­வின்­படி, சிங்­கப்­பூ­ரில் நான்கு பேரில் ஒருவருக்கும் குறை­வா­ன­வர்­கள் மட்­டுமே கடந்த மூன்று ஆண்­டு­களில் தங்­கள் காது­க­ளைப் பரி­சோதித்­துள்­ள­னர் எனக் கண்­ட­றி­யப்­பட்­டது.

கவ­லைக்­கு­ரிய இந்தக் கண்­டு­பிடிப்­பில், கேட்­கும் திறன் சற்று மந்­த­மாக இருப்­ப­வர்­களில், 76 விழுக்­காட்­டி­னர் தக்க சிகிச்சை பெறு­வ­தற்­குத் தயங்­கு­கின்­ற­னர். நிலைமை அவ்­வ­ள­வாக மோச­மில்லை, காது­க­ளைப் பரி­சோதித்­துப் பார்க்­கத் தயக்­கம் போன்­றவை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான கார­ணங்­க­ளாக இருக்­க­லாம்.

செவிப்­பு­லன் தொடர்­பில் சிர­மங்­களை எதிர்­நோக்­கும் பெரும்­பாலானோர், தங்­கள் வேலை­யி­லும் குடும்­பத்­தி­லும் அத­னால் பாதிப்­பு­கள் ஏற்­ப­டா­த­வரை மருத்­து­வரை நாடிப் பரி­சோ­தித்­துக்­கொள்ள தேவை இல்லை என்­பது சில­ரின் கருத்­தா­கும்.

காதின் நல­னைப் பாது­காப்­ப­தில் ஒரு­வர் நாட்­டம் காட்­ட­வில்­லை­யென்­றா­லும் அவ­ரு­டைய நண்­பர் அல்­லது குடும்­பத்­தி­னர் அவர்­களை மருத்­து­வரி­டம் செல்ல ஊக்­கு­விக்­கு­மாறு பரிந்­துரைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சுகா­தார ரீதி­யாக, காது கேளாமை உல­க­ள­வில் ஒரு நோயா­கக் கரு­தப்­படு­கிறது. தற்­போது ஐந்து பேரில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே இந்­தப் பிரச்­சினை இருந்­தா­லும் 2050க்குள் அது நான்­கில் ஒன்­றா­கி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 422,000 முதி­ய­வர்­கள் இத­னால் அவ­திப்­ப­டு­கிறார்­கள். அதோடு, 100,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் செவிப்­பு­லன் குன்­றி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர். ஆனால் 3.3 விழுக்­காட்­டினர் செவிப்­பு­லன் சாத­னத்தை அணி­கின்­ற­னர்.

தமது 14வது வய­தில் செவிப்­பு­லன் திறனை இழந்த 43 வயது சாந்தி சண்­மு­கம், செவிப்­பு­லன் சாத­னத்­தைப் பயன்­ப­டுத்தி வந்­தார். நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன், மொத்­த­மா­கத் தமது செவிப்­பு­லனை இழந்த இவர், காது கேட்­ப­தற்கு உத­வும் சாத­னத்­தைப் பொருத்­து­வ­தற்­கான அறுவை சிகிச்­சை­யைச் செய்­து­கொண்­டார்.

2020ல் அறு­வை­சி­கிச்சை மேற்­கொண்டு, அதன் பின்­னர் ஆறு மாதங்­க­ளுக்­குச் சிகிச்சை பெற்ற அவர், செவிப்­பு­லன் சாத­னத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கும் அதை அறுவை சிகிச்சை மூலம் பொருத்­திக்­கொண்டதற்கும் அதிக வேறு­பாட்­டைக் கண்­ட­தாக குறிப்­பிட்­டார். தற்­போது தமக்கு நன்கு காது கேட்­ப­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!