அன்றாடம் நூல் வாசிப்பதால்...

சிங்­கப்­பூ­ரில் பதின்ம வய­தி­னர் குறை­வாகவே வாசிக்­கி­றார்­கள், வய­தா­கும்­போது பல­ரும் வாசிப்பதை அறவே விட்­டு­வி­டு­கிறார்­கள். சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளின் வாசிப்­புப் பழக்­கம் குறித்து தேசிய கல்­விக் கழ­கம் 2021இல் நடத்­திய ஆய்­வில் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­களில் குறைந்த விழுக்­காட்­டி­னரே நூல் வாசிப்­ப­தில் மகிழ்ச்சி அடை­வ­தா­கத் தெரியவந்துள்ளது.

பதின்ம வய­தி­னர் கைப்­பே­சி­யில் அதிக நேரத்­தைச் செல­வி­டு­வ­தால் வாசிப்­ப­தில் ஆர்­வ­மில்லை என்­பது எப்­போ­தும் உண்­மை­யல்ல என்­ப­தை­யும் ஆய்வு குறிப்­பிட்­டுள்­ளது. வாசிப்­பில் ஆர்­வ­முள்­ள­வர்­கள் நூல்­க­ளை­யும் மின்­நூல்­க­ளை­யும் வாசிக்­கி­றார்­கள்.

ஒவ்­வொ­ரு­நா­ளும் சில நிமி­டங்­க­ளா­வது வாசிப்­பது வாழ்­வில் பெரும் பய­னைத் தரும்.

1. மூளைக்­கான மனத் தூண்டுதல்

ஒவ்­வொ­ரு­நா­ளும் வாசிக்­கும்­போது, மனச் செயல்­பாடு தூண்­டப்­ப­டு­கிறது.

2. மன அழுத்­தம் குறையும்

மன­தைத் திசை­தி­ருப்ப ஏதா­வது செய்­யா­விட்­டால் அன்­றா­டக் கவ­லை­கள் தொந்­த­ரவு செய்­யும். வாசிப்பு மிக­வும் சுவா­ரஸ்­ய­மான ஒன்­றைத் தொடங்­கு­வ­தற்கு மன அமை­தி­யைத் தருகிறது.

3. பரந்துபட்ட அறிவு

நூல் வாசிப்­பின்­மூ­லம் பல விஷ­யங்­க­ளைத் தெரிந்­து­கொள்ளலாம்.­மாறுபட்ட வாழ்க்கை அனு­ப­வங்­களைப் பெற­லாம். பல்வே­று­பட்ட மனி­தர்­க­ளை­யும் குணாதிசயங்­களை­யும் அறிந்­து­கொள்­வ­தன் மூலம், வாழ்க்­கைச் சிக்­கல்­களை எளி­தாக எதிர்­கொள்ள முடி­யும்.

4. சொல் ­வ­ளம்

வாசிக்­கும் பழக்­கத்தால் சொல் வள­மும் மொழி வள­மும் பெரு­கும்.

5. நினை­வாற்­றல் மேம்­படும்

வழக்­க­மான வாசிப்பு மூளைக்குச் சிறந்த பயிற்­சி­யா­கும். கற்­பனைப் புனை­வு­க­ளைப் படிக்­கும்­போது மூளை பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­க­ளின் பெயர்­கள், இயல்­பு­களை நினை­வில் வைத்­தி­ருக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் உள்­ளது. இது நினை­வாற்­றலை வளர்க்­கிறது.

6. பகுப்­பாய்வு சிந்­தனை

ஒவ்­வொ­ரு­நா­ளும் வாசிப்­ப­தன் நன்­மை­களில் ஒன்று, பகுப்­பாய்வுத் திறன் மேம்­ப­டு­வது.

7. கவ­ன­மும் செறி­வும் மேம்­படு­ம்

தொழில்­நுட்­பம் செய்த மோச­மான செயல்­களில் ஒன்று மூளை­யைச் சோம்­பே­றி­யாக்­கியது. சிக்­கல்­க­ளைத் தீர்ப்­ப­தில் கவ­னம் செலுத்­து­வ­தற்கு வாசிப்பு முக்­கிய பங்கு வகிக்­கிறது.

8. அமைதி

தனி­மை­யில் சிறிது நேரம் செல­வ­ழிக்க வாசிப்பு உத­வும். அலைக்­கழிக்கும் மனதை அமை­திப்­ப­டுத்­தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!