பிராய்லர் கோழி- நாட்டுக்கோழி வேறுபாடு

கோழி­களில் நாட்­டுக்­கோ­ழி­களும் பிராய்­லர் கோழி­களும் உள்­ளன.

இந்த இரண்டு வகை கோழி­களில் எது சாப்­பிட்­டால் உட­லுக்கு நல்­லது என்ற கேள்­வி­க­ளைப் பலர் எழுப்­பு­வ­தாக மருத்­து­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

பிராய்­லர் கோழிக்­கும், நாட்­டுக் கோழிக்­கும் இடையே உள்ள சிறு வேறு­பாடு கிட்­டத்­தட்ட நாட்­டுத் தக்­கா­ளிக்­கும் ஹைபி­ரிட் தக்­கா­ளிக்­கும் இடை­யி­லான வித்­தி­யா­சத்­துக்­குச் சமம்.

கிராமப் புறங்­களில் வீட்­டைச் சுற்­றி­யுள்ள வெட்ட வெளி­யில் தானி­யங்­க­ளை­யும் மண்­ணில் உள்ள புழுக்­க­ளை­யும் தானே தேடி உண்­ணக்­கூ­டி­யவை நாட்­டுக் கோழி­கள்.

இப்­படி தின­மும் வெளிப் புறங்களில் அலைந்து திரி­வ­தால் நாட்­டுக்­கோழி இறைச்­சி­யில் கொழுப்பு அளவு குறைந்­தும் புர­தச் சத்­தின் அளவு கூடி­யும் காணப்­

ப­டு­கிறது. ஆனால், அதே தானி­யங்­க­ளை­யும் தீவ­னத்­தை­யும் பண்­ணை­யாட்­கள் கொண்­டு­வந்து வைக்க, உட்­கார்ந்த இடத்­தி­லேயே உண்­டு­கொ­ழிக்­கும் பிராய்­லர் கோழி­களில் புர­தச்­சத்து மட்­டு­மன்றி கொழுப்­பின் அள­வும் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கிறது.

மேலும், நாட்­டுக்­கோ­ழி­யு­டன் ஒப்­பி­டும்­போது இதில் அத்­தி­யா­வ­சி­யக் கொழுப்பு அமி­லங்­கள் சற்று குறை­வா­க­வும் இருக்­கிறது. ஆக, அத்­தி­யா­வ­சி­யக் கொழுப்பு அமி­லங்­களும் புர­தங்­களும் அதி­க­மா­க­வும் கொழுப்பு குறை­வா­க­வும் உள்ள நாட்­டுக்­கோ­ழி­யு­டன் ஒப்­பி­டும்­போது பிராய்­லர் கோழி­யின் சத்து சற்று குறைவு ­தான். இருப்­பி­னும், பிராய்­லர் கோழி­யின் அதி­கப் புர­தச்­சத்­தை­யும் குறைந்த மாவுச் சத்­தும் சரி­யான அள­வில் சாப்­பி­டும்­போது தீங்­கொன்­றும் இல்லை.

முந்­திப் பரு­வ­ம­டை­யும் அச்­சம்

இரண்டு விஷ­யங்­களில் பிராய்­லர் கோழி­க­ளைப் பலர் சந்­தே­கக் கண்­ணு­டன் பார்க்­கின்­ற­னர்.

மருந்­து­கள் மற்­றும் ரசா­ய­னங்­கள் சேர்க்­கப்­பட்ட செயற்கை உணவு பிராய்­லர் கோழிக்கு வழங்­கப்­ப­டு­கிறது என்­றும் ஹார்­மோன் ஊசி­கள் செலுத்­தப்­பட்டு இவை வளர்க்­கப்­ப­டு­கின்­றன என்­றும் நம்­பப்படு­கிறது.

இத­னால் பிராய்­லர் கோழி­யைப் பெண் குழந்­தை­கள் அதி­கம் சாப்­பிட்­டால் முந்­திப் பரு­வம் அடைந்­து­வி­டு­வார்­கள் என்ற அச்­சம் பர­வ­லாக உள்­ளது என மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

முந்­திப் பரு­வ­ம­டை­த­லுக்கு மாறி­வ­ரும் நமது உண­வுப் பழக்­கங்­கள்­தான் முக்­கி­யக் கார­ணமே தவிர கோழிக்கு ஹார்­மோன்­களோ, ஸ்டீ­ராய்­டு­களோ வழங்­கப்­ப­டு­வ­தால் அல்ல என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

பிராய்­லர் கோழி­களில் உள்ள அதிக புர­தச்­சத்­தும் அதி­கக் கொழுப்­பும் பெண்­க­ளின் ஊட்­டத்தை அதி­கப்­ப­டுத்­துமே தவிர பரு­வ­ம­டை­தலை முந்த வைக்­காது என்றே ஆய்­வு­கள் தெரி­விப்­ப­தாக அறி­யப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!