சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் வழிகள்

சில­ருக்கு குழந்­தை­களுக்கு இருப்பதைப் போல் மென்­மையான சரு­மம் இருப்­ப­தைக் கண்டு நாம் பொறா­மைக்கு ஆளா­கலாம். சரு­மத்தை 'வழு­வழு'வென்று வைத்­தி­ருப்­பதற்­கான அவர்­க­ளின் ரக­சி­யம் என்­ன­வாக இருக்­கும் என்று நாம் யோசிப்­ப­துண்டு.

முது­மை­ய­டை­வது ஒரு­பு­றம் இருக்க சில அம்­சங்­களில் நம்மை சரி­வ­ரக் கவ­னித்­துக்­கொள்­ளா­த­தும் சரு­மத்தை பாதிக்­கக்­கூ­டும்.

இதை மாற்ற நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம்.

இவை சரு­மத்தை மென்­மை­யாக வைத்­தி­ருக்க உத­வும் என்று 'டைம்ஸ்­ஆ­ஃப்­இந்­தியா' செய்தி நிறு­வ­னத்­தின் இணை­யத்­த­ளத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கழுவி சுத்­தம் செய்­து­கொள்­வது. அடிக்­கடி உட­லைக் கழு­வு­வது சரு­மத்தை மென்­மை­யாக வைத்­தி­ருக்க உத­வும். மேலும், சரு­மத்­தின் ஈரத்தன்மையைக் காப்பதற்கான களிம்பையும் உப­யோ­கிக்­க­லாம்.

ஆரோக்­கி­ய­மான உணவுப் பழக்கங்கள். உண­வுப் பழக்க வழக்­கங்­கள் சரி­யாக இருந்­தால் சரு­மம் ஆரோக்­கி­ய­மாக இருக்­கும். நாம் உட்­கொள்­ளும் ஊட்­டச்­சத்­துக்­கும் சரும ஆரோக்­கி­யத்­துக்­கும் தொடர்­புள்­ளது.

அடிக்­கடி சிரி­யுங்­கள். சிரித்­தால் முகத்­தில் உள்ள சுருக்­கங்கள் வெளிப்­ப­டை­யாகத் தெரி­யும் என்­பது சில­ரின் கவலை. எனி­னும், சிரிப்­ப­தால் பல நன்­மை­கள் உள்­ளன. சரு­மம் ஆரோக்­கி­ய­மாக இருக்க ரத்த ஓட்­டம் நன்­றாக இருக்­க­வேண்­டும். அடிக்­கடி சிரிப்­பது முகத்­தின் ரத்த ஓட்­டத்தை மேம்­படுத்­தும்.

தண்ணீர் அருந்துங்கள். நமது உடலில் 70 விழுக்காடு தண்ணீர் சத்து உள்ளது. போதுமான அளவு தண்ணீரை அருந்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

அடிக்­கடி உடற்­ப­யிற்சி செய்­யுங்­கள். ஆரோக்­கி­யம் என்ற வார்த்தையை உச்­சரிக்­கும்­போது உடற்­ப­யிற்சி எனும் வார்த்­தை­யும் பல வேளை­களில் சேர்ந்தே வரும். அடிக்­கடி உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டும்­போது உட­லின் செயல்­மு­றை­கள் மேம்­படும். அதில் நமக்கு வரும் இன்­ப­ம் ஆரோக்­கி­ய­மான சரு­மத்­தின் வாயி­லா­க­ வெளிப்படும்.

இவை அன்றாட வாழ்க்கையில் நாம் எளிதில் செய்துகொள்ளக்கூடிய மாற்றங்களே. இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதே மென்மையான சருமத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் தொடர்பிலான ஆலோ­சனைக்கு சம்­பந்­தப்­பட்ட சுகா­தார நிபு­ணர்­களின் அறிவுரைக் கேட்டுக்கொண்டுசெய்படுவது நல்லது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!