தமிழகத்தின் மிச்சாங் புயல், கர்நாடகா வறட்சிக்கான நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை தாக்கிய மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல் டிசம்பர் இறுதியில் தூத்துக்குடி, நெல்லையில் கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. உயிர்பலிகள் ஏற்பட்டன.

இந்த புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் பிரசாரங்களிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத மத்திய அரசு எனக் கடுமையாக சாடி வந்தார்.

இந்நிலையில், மிச்சாங் புயல் பாதிப்புகளுக்காகத் தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அரசுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,498 கோடி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ், வறட்சி நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஏப்ரல் 26ஆம் தேதி கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, வறட்சி நிவாரண நிதி, ஜிஎஸ்டி நிதிப் பங்கீடு விவகாரங்களை முன்வைத்துப் பேசினார். பாஜக, கர்நாடகாவுக்கு காலி சொம்பைத் தருவதாகக் கூறினார். பாரதிய சொம்புக் கட்சி என்று காங்கிரஸ் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசுக்கும் நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!