அசாம் கோயிலுக்குள் செல்வதற்கு ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

கவ்காத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் (கிழக்கில் இருந்து மேற்கு) வரை ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் இரண்டாம் கட்டப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறாா்.

தற்போது அவரது நடைப்பயணம் அசாம் மாநிலத்தை அடைந்துள்ள நிலையில், போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குள் திங்கள்கிழமை காலை சென்று அவர் பிரார்த்தனை செய்ய முயன்ற போது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“கோயிலுக்குள் செல்லமுடியாத அளவிற்கு நான் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டேன்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்தபிறகுதான் இந்த ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

“ராகுல் காந்தி தனது பிரார்த்தனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பக்கம் ராமர் கோவில் குடமுழுக்கு நேரலை, மறுபக்கம் ராகுல் காந்தி ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் சாமி தரிசனம் என்பது மோதலை ஏற்படுத்தும். இது அசாமிற்கு நல்லதல்ல,” என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மாக் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து, படாதிரவாதான் கோயிலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!