உயிரோடு இருந்த கணவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதும் உயிரை விட்ட பெண்

புவனேஷ்வர்: கணவர் உயிரிழந்த சோகத்தில் தமது உயிரைவிட்டார் ஒரு பெண். ஆனால், கணவர் இறக்கவில்லை என்று மருத்துவமனை தாமதமாக அறிவித்ததால் தேவையின்றி ஒரு பெண்ணின் உயிர் போய்விட்டது.

இச்சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்தது. தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ‘ஹை-டெக் மருத்துவமனை’யில் டிசம்பர் 29ஆம் தேதி குளிரூட்டி (ஏர்கண்டிஷன்) பழுதடைந்தது.

தொழில்நுட்பர்கள் ஐவர் அதனைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்தது. அவர்களில் ஜோதிரஞ்சன் மல்லிக், திலீப் சமந்தராய், சிமாஞ்சலந்து ஸ்ரீதம்ஹத் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் திலீப், 34, டிசம்பர் 30ஆம் தேதி இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அவரது உடல் காவல்துறை மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திலீப்பின் உறவினர்கள் அந்த உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் எரியூட்டினர். கணவன் இறந்த துக்கம் தாளாமல் புத்தாண்டு தினத்தில் அவரது மனைவி சோனா, 24, தமது உயிரை மாய்த்துக்கொண்டார். திலீப்-சோனா திருமணம் நடந்து ஈராண்டுதான் ஆகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. உயிரிழந்தது திலீப் அல்ல; சிகிச்சையில் இருந்த ஜோதிரஞ்சன் என்பதே அந்தத் தகவல்.

அதனைத் தொடர்ந்து திலீப்பின் உறவினர்களும் ஜோதிரஞ்சனின் உறவினர்களும் மருத்துவமனைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.

“மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம். இதன் மூலம் எனது குடும்பமே சிதைந்து விட்டது. எனது மருமகள் இறந்துவிட்டார்,” என சோனாவின் மாமா ரவிந்தர் ஜெனா வருத்தத்தோடு செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேபோல, ஜோதிரஞ்சனின் பெற்றோரும், இறுதிச்சடங்கிற்குக் கூட தங்களது மகனின் உடல் கிடைக்கவில்லேயே என கண்ணீர்மல்கக் கூறினர்.

“எனது கணவர் எனக்கு வேண்டும்,” என்று அழுது புலம்பினார் ஜோதிரஞ்சனின் மனைவி அர்பிதா முகி. 

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தொழில்நுட்பர்கள் வேலை செய்த ஏ.சி. நிறுவனம் சார்பாக குத்தகைதாரர் கொடுத்த அடையாளங்களை வைத்துத்தான் இறந்தவர் குறித்த தகவலை அறிவித்ததாகவும் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்மிதா பாத்தி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!