மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி

புதுடெல்லி: இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

“எதிர்பார்த்ததைவிட பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, ஊடகங்கள் நடத்திய மாதிரி வாக்குகளில் காங்கிரஸ்-பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது ஆனால் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றது. பிரதமர் மோடிக்கு உள்ள ஆதரவைப் பிரதிபலிக்கிறது,” என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தெலங்கானாவில் வெற்றிபெற்றிருந்தாலும் வடக்கு மாநிலங்களில் காங்கிரசின் தோல்வி ராகுல் காந்திக்கு பின்னடைவைத் தந்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அதே நேரம் பாஜக தென் மாநிலங்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

சரிவை சந்தித்த சந்திரசேகர ராவ்

தெலுங்கானாவில் 3ஆவது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரேவந்த் ரெட்டியின் தலைமையில் 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

119 தொகுதிகள் உள்ள தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பாஜகவுக்கு 9 தொகுதிகள் கிடைத்தன.

பாஜக ஆதிக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் 166 இடங்களில் பாஜக வெற்றிபெற்றதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த வெற்றியின் மூலம் பாஜக ஐந்தாவது முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தொடரவுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 116 இடங்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரசுக்கு 69 தொகுதிகள் கிடைத்தன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 54 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. காங்கிரசுக்கு 36 தொகுதிகள் கிடைத்தன.

பாஜக, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சி வெற்றிபெற்ற தொகுதிகளில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதனால் கட்சிகளின் கவனம் அதன் பக்கம் இப்போது திரும்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!