சிறார் காப்பகத்தில் கொடூரம்; அதிகாரி இடைநீக்கம், விசாரணை

ஆக்ரா: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்படும் சிறார் காப்பகத்தில் சிறுமிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக ஒரு காணொளி மூலம் தெரியவந்து இருக்கிறது.

அந்தக் காப்பகத்தில் இருக்கும் ஒரு சிறுமியை அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் படுக்கையில் தள்ளி காலணிகளால் அடிக்கிறார்.

அந்தச் சிறுமி உதவி இல்லாமல் சத்தம் போட்டு அழுவதைக் காணொளிப் படம் காட்டுகிறது.

ஆக்ராவில் உள்ள ராஜ்கியா பால் கிரா என்ற சிறார் விடுதியில் அந்தக் கொடுமைகள் அரங்கேறி இருக்கின்றன.

அங்குள்ள பொறுப்பு அதிகாரியான மாது ஒருவர் சிறுமிகளின் கை, கால்களை கட்டிப்போட்டு தாக்குவதும் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படும் இந்தக் கொடுமை பற்றி அதிகாரிகள் முழு அளவில் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புகளில் உள்ள அரசு பராமரிப்பாளர்களே இத்தகைய கொடுமைகளில் ஈடுபட்டு இருப்பதால் இந்தப் பிரச்சினை பெரும் அதிர்ச்சியைக் கிளப்பிவிட்டு இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தக் காப்பகத்தின் பொறுப்பாளராக பூனம் பால் என்ற மாது இருக்கிறார் என்றும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாட்டி பூனம் பால் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மாது பிரயாக்ராஜ் என்ற பகுதியில் செயல்பட்ட ஒரு சிறார் காப்பகத்தில் பொறுப்பாளராக இருந்தார் என்றும் அப்போதும் இவர் இதேபோன்ற காரியங்களைச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!