கதைக்களத்தில் முஹைதீனின் ‘அரிதாரம்’

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி, தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் ஞாயிறு (டிசம்பர் 7) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முஹைதீனின் ‘அரிதாரம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்தும் நூலாசிரியருடனும் கலந்துரையாடல் இடம்பெறும்.

கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

அடுத்த மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூல் அறிமுகங்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

மூன்று பிரிவுகளாக நடைபெறும் பிப்ரவரி மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:

உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க முடியாத அளவு மனத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது’

இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

“நாம் செய்ய வேண்டிய வேலைகள் எதையுமே நீ கண்டுகொள்ளாமல் இருக்கிறாயே?” அகிலா என்னைக் கடிந்துகொண்டாள்.

பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.

‘என்னை யாருமே நம்பவில்லையே... என்ன செய்யப் போகிறேன்?” என்று மனம் துவண்டது.

படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்படிவத்தின் வழியாக இம்மாதம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ அல்லது பிரதீபா வீரபாண்டியன் - 81420220 / பிரேமா மகாலிங்கம் - 91696996.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!