ரஜினியால் பெரும் தொல்லை என பக்கத்து வீட்டுப் பெண் குற்றச்சாட்டு

பொங்கல் திருநாளன்று சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூடினர்.

இதையறிந்து, வீட்டில் இருந்து வௌியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அனைத்து மக்களும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

“வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை என்றென்றும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ரஜினி வீட்டின் பக்கத்தில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரப் பெண் ஒருவர், ரஜினியால் எப்போதும் தொல்லைதான் என கடும் கோபத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.

“நாங்களும் வரி செலுத்தித்தான் பல ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன் கூடுவது எங்களுக்குப் பெரும் தொல்லையாக உள்ளது.

“எப்போதும், தலைவா இறைவான்னு முழக்கமிடுகின்றனர். என்னைப் போலவே இங்கு வசிக்கும் 21 வீட்டுக்காரர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.

“உங்கள் வீட்டின் கேட்டைத் திறந்து ரசிகர்கள் எல்லோரையும் உள்ளே விடுவதுதானே? எல்லோரும் எங்கள் வீட்டின் முன்பு கூடி இப்படிக் கத்தி கூச்சலிடுகிறார்கள். இதனால், எங்களது சுதந்திரம் பறிபோய்விட்டது. விழாக் காலங்களில் எங்கள் வீட்டின் வாசலை மூடி வைத்திருக்க முடியுமா?” என ரஜினிகாந்த் வீட்டின் பாதுகாவலரிடமும் ரசிகர்களிடமும் செய்தியாளர்களிடமும் அந்தப் பெண்மணி கேள்வி கேட்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!