‘கங்குவா’ சுவாரசியங்கள்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது ‘கங்குவா’. வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதையுடன் உருவாகும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையை தயார் செய்துவிட்டாராம் சிவா. சூர்யாவிடம் கதையை விவரிக்க சுமார் மூன்று மணி நேரம் ஆனதாம்.

கதையின் ஒவ்வொரு அங்குலத்தையும் உன்னிப்பாகக் கவனித்த சூர்யா, முழுக்கதையையும் கேட்ட பின்னர் சிவாவை கட்டியணைத்து அருமையாக இருப்பதாகப் பாராட்டி உள்ளார்.

வரலாற்றுப் பின்னணி, கம்பீரமான தோற்றம் ஆகிய அம்சங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. மேலும், 11 மொழிகளில் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் (3டி) உருவாகும் படம் என்பதும் சூர்யாவுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

அண்மையில் வெளியான ‘கங்குவா’ முன்னோட்ட காட்சித் தொகுப்பில் போர்க்களத்தில் சூர்யா கம்பீரமாக காட்சியளிப்பது ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

இதில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். கோவா நகரில் அவரும் சூர்யாவும் பங்கேற்ற காதல் பாடலுடன்தான் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பின்னர் சென்னை, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.

பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், கோவை சரளா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி உள்ளது. வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

திஷா பதானி சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன.

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம். சூர்யாவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் என்னை வியக்க வைத்தன. இயக்குநர் சிவா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர். படம் வெற்றிபெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை,” என்கிறார் திஷா.

பல காட்சிகளில் ‘சிக்ஸ்பேக்ஸ்’ உடற்கட்டுடன் காட்சியளிப்பாராம் சூர்யா. வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய காட்சிகளை அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கி உள்ளனர். அயன், வாரணம் ஆயிரம் படங்களில் பார்த்த சூர்யாவை மீண்டும் திரையில் பார்க்க முடியுமாம்.

மேலும், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் காட்சிகளுக்காக சூர்யாவுக்கு சிறப்பு ஒப்பனை போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பனைக்காக நாள்தோறும் மூன்று மணி நேரம் செலவிட்டுள்ளார் சூர்யா.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகளுக்காக அதிகாலை 2 மணிக்கு சூர்யா ஒப்பனை போட்டுக் கொண்டு, ஐந்து மணிக்கெல்லாம் மொத்தப் படக்குழுவும் தயாராகிவிடுமாம்.

வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் தினமும் நீண்டதூரம் நடந்து சென்றதாகவும் சூர்யா உட்பட மொத்த படக்குழுவும் ஒத்துழைத்ததாகவும் பாராட்டுகிறார் இயக்குநர் சிவா.

சூர்யா நடித்த படங்களிலேயே ஆக அதிக பொருள்செலவில் உருவாகும் படம் ‘கங்குவா’. எனினும் பத்து மொழிகளில் வியாபாரமும் பெரிதாக இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ஓடிடி உரிமையை மட்டும் அமேசான் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கி உள்ளது.

இந்தி உள்ளிட்ட பிறமொழிகளுக்கான உரிமம் இதைவிட அதிக தொகைக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, செயற்கைக்கோள் உரிமை, இசை உரிமை, வெளிநாடுகளுக்கான வெளியீட்டு உரிமை என மேலும் பல கோடிகள் கிடைக்கும் என்றும் படம் வெளியாகும் முன்பே தயாரிப்புத் தரப்புக்கு போட்ட முதலீடு, உரிய லாபத்துடன் திரும்பக் கிடைத்துவிடும் என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.

‘கங்குவா’ வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!