ஐஃபோன் காட்சிகளுடன் ‘விடுதலை’

ஆ. விஷ்ணு வர்­தினி

அடர்­காடு, மலை­கள் ஆகி­ய­வற்றைத் தனது கள­மா­கக் கொண்ட ‘விடு­தலை’ திரைப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் ஆபத்­து­கள் நிறைந்­த­தாக இருந்­தது. நுட்­ப­மான, பயங்­க­ர­மான அதி­ரடி காட்­சி­கள் கொண்­டி­ருந்த அது ஐஃபோன் காட்­சி­க­ளைக் கொண்­ட­தா­க­வும் அமைந்­தது. தமது இரு­ப­தாண்டு கால படப்­பி­டிப்பு அனு­ப­வத்­தில் இத்­த­கைய முதல் முயற்­சி­க­ளுக்­கான தள­மாக ‘விடு­தலை’ விளங்­கி­ய­தா­கக் கூறி­னார், திரைப்­பட ஒளிப்­ப­தி­வா­ளர் ரா. வேல்­ராஜ்.

இயக்­கு­நர் வெற்­றி­மா­ற­னு­டன் ஐந்­தா­வது முறை­யாக இணை­யும் வேல்­ராஜ், முன்­கூட்­டியே தயா­ராக முடி­யாத வகையில், எதிர்­பாரா சவால்­கள் விடு­த­லை­யின் படப்­பிடிப்­பின்­போது குறுக்­கிட்­டதை புன்­ன­கை­யு­டன் நினை­வு­கூர்ந்­தார்.

மலை­மீ­துள்ள சிறிய பாதை­களில் பெரிய படப்­பிடிப்­புக் கரு­வி­ க­ளைக் கொண்டுசெல்ல முடி­யா­த­தும் பூச்­சி­க­ளுக்கு இரை­யா­வ­தும் அவற்­றில் அடங்­கும்.

ஆரம்­பக் காட்­சி­களில் நடி­கர் சூரி மேடுபள்­ளங்­க­ளைத் தாண்டி உடை­மை­க­ளைச் சுமந்து வர­வேண்­டும். மலை உச்­சியில் இருந்த ஓர் ஆள் மட்­டுமே செல்­லக்கூடிய சிறு பாதை­வழி அவ­ரும் சக நடி­க­ரும் நடந்து செல்­வர். வேறு வழி­யின்றி, கம்­பில் கட்­டப்­பட்டு ஐஃபோன் 13ல் ‘4K’ அமைப்­பில் அக்­காட்சி எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

“முதன்மை கேம­ராவை அவ்­வளவு தூரத்­திற்குக் கொண்டு செல்ல முடி­ய­வில்லை. சுற்­றி­லும் மரங்­களும் செடி­கொ­டி­களும் இருந்­த­தால், படப்­பி­டிப்­பா­ள­ரான எனது சிறு அசை­வும் அவற்றை அசையச் செய்­யும்; பின்­ன­ணி­யில் இருந்த என்­னைக் காட்­டிக் கொடுத்துவிடும். ஐஃபோனில் படம்­பி­டிப்­பதே இதற்கு தீர்வு என நாங்­கள் முடிவு செய்­தோம்,” என்று தமிழ் முர­சி­டம் கூறி­னார் திரு வேல்­ராஜ்.

ரசி­கர்­க­ளின் மனதை வென்­றுள்ள ‘உன்­னோடு நடந்தா’ பாட­லின் படப்­பி­டிப்பு திரு வேல்­ராஜுக்கு மற்­றொரு சவா­லான அனு­ப­வ­மாக அமைந்­தது.

திரைப்­பட இர­வுக்­காட்­சி­கள் பல பக­லில் எடுக்­கப்­பட்டு, பின்­னர் இர­வு­போல காட்­சி­ய­ளிக்க திருத்­தம் செய்யப்படக் கூடியவை. இப்­பா­ட­லின் காட்­சி­களோ, ஒருவார ­கா­லத்­துக்கு முழுக்க முழுக்க காட்­டுப்­ப­கு­தி­யில் இர­வில் எடுக்­கப்­பட்­டவை.

நிலவு வெளிச்­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கிட்­டத்­தட்ட ஆயி­ரம் மின்­வி­ளக்­கு­கள் மரங்­களில் கட்­டப்­பட்­டன. கைவி­ளக்கு வெளிச்­சத்­தி­லேயே நடி­கர்­க­ளின் முகங்­கள் தெரி­ய­வேண்­டும்.

“காட்­டுப்­ப­கு­தி­யில் இர­வில் படம் பிடிப்­பது ஆபத்­தா­னது, சவா­லா­ன­தும்­கூட. இப்­படி பலவகை­களில் ‘விடு­தலை’ எனது கண்­ணோட்­டங்­களை விரி­வு­ப­டுத்தி உத்­தி­களை மெரு­கேற்றி உள்­ளது,” என்­றார் திரு வேல்­ராஜ்.

அதி­கம் போற்­றப்­பட்ட படத்­தின் வெட்­டுக்­க­ளில்லாத ஐந்து நிமிட விபத்­துக் காட்­சியை எடுக்க ஒருமாதக் ­கா­ல­மும் எட்­டுக் கோடி ரூபாயும் செலவா­ன­தாக திரு வேல்­ராஜ் விளக்­கி­னார். கிட்­டத்­தட்ட ஆயி­ரம் பேர் அக்­காட்­சி­யின் படப்­பி­டிப்­பில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

ஏறக்­கு­றைய மூன்­றாண்­டு­களுக்கு முன்­னர் விடு­த­லை­யின் கதைக் கரு உத­ய­மா­னது. அச்­சமயத்­தில் இயக்­கு­நர் பார­தி­­ராஜாவே விஜய் சேது­ப­தி­யின் கதா­பாத்­தி­ரத்­துக்கு ஆலோ­சிக்­கப்­பட்­ட­தாக திரு வேல்­ராஜ் பகிர்ந்­து­கொண்­டார்.

படப்­பி­டிப்­புத் தளங்­க­ளுக்கு வரும் சிர­மங்­கள் கருதி அவர் வில­கி­யதைத் தொடர்ந்து, விஜய் சேது­பதி இணைக்­கப்­பட்டு, திரைப்­ப­டம் திட்­ட­மிட்­ட­தை­விட பிரம்­மாண்­ட­மான முறையில் பரி­மா­ண­மேற்­றது. 40 நாள் நீடிக்க இருந்த படப்­பி­டிப்பு 180 நாள்­கள் பிடித்­த­தோடு இரு பாகத் தொட­ரா­னது.

பெண்­க­ளைத் துன்­பு­றுத்­தும் வன்­முறை காட்­சி­கள், யதார்த்­த­மான அதி­ரடி சண்டை காட்­சி­கள் ஆகி­யவை வெற்­றி­மா­ற­னின் பாணிக்கே உரி­யவை. இவை அசு­ரன், வட­சென்னை படங்­க­ளி­லும் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றை காட்­சி­ய­மைக்­கும்­போது ஏற்­பட்­டது போலவே, விடு­த­லை­யின் சில காட்­சி­கள் திரு வேல்­ராஜை இப்­போ­தும் சிலிர்க்க வைப்­பவை.

மக்­க­ளுக்­கான இயக்­கு­ந­ராக வெற்­றி­மா­றனை குறிப்­பிட்ட அவர், “ஒவ்­வொரு காட்­சி­யும் கண்­க­ளால் நேரில் காண்­ப­து­போல இயல்­பாக இருக்­க­வேண்­டும், ஒவ்­வொரு வச­ன­மும் அர்த்­த­முள்­ள­தாய் இருக்­க­வேண்­டும் என்­பதை வெற்­றி­மா­றன் உறு­தி­ப­டுத்­தி­னார்,” என்­றார்.

இன்­னும் கால்­வா­சியே எஞ்­சி­யுள்ள விடு­தலை பாகம் இரண்­டின் படப்­பி­டிப்பு இம்­மாத இறு­தி­யில் தொடங்­கும். திரைப்­ப­டம் ஆண்­டி­று­திக்­குள் வெளி­யா­க­லாம். மக்­கள் கட்­டா­யம் பாகம் இரண்டை எதிர்­பார்த்துக் காத் திருக்க வேண்­டும்; பாகம் ஒன்று வெறும் முன்­னோட்­டமே என்று கூறி­யுள்­ளார் திரு வேல்­ராஜ்.

வெற்­றி­மா­ற­னின் அடுத்த திரைப்­ப­ட­மான ‘வாடி­வா­சல்’ படத்­தி­லும் திரு வேல்­ராஜ் இணைந்­துள்­ளார். செப்­டம்­பர் மாதத்­தில் அதன் படப்­பி­டிப்பு தொடங்க உள்­ளது. 2015ல் நடி­கர் தனு­ஷின் ‘தங்­க­ம­கன்’ திரைப்­ப­டத்­துக்­குப் பின்­னர் தற்­ச­ம­யம் இயக்­கத்­தில் இறங்­கு­வ­தாக இல்லை என்­றும் திரு வேல்­ராஜ் தெரி­வித்­தார்.

இவ்வாண்டு வெளியான ‘விடுதலை’ பாகம் ஒன்று படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பாளர் ரா.வேல்ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!