ஏமி: வெட்கப்பட வேண்டும்

இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் இயக்­கத்­தில் உரு­வா­கும் ‘அச்­சம் என்­பது இல்­லையே’ படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் தனது அடுத்த சுற்று தொடங்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் ஏமி ஜாக்­சன்.

அவ­ரது சொந்த ஊரான லண்­டன்­தான் இப்­ப­டத்­தின் கதைக்­க­ளம். சிறை அதி­காரி சாண்ட்ரா ஜேம்ஸ் என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

“பெரும்­பா­லான காட்­சி­களை லண்­ட­னில்­தான் பட­மாக்கி உள்­ள­னர். அத­னால் உற்­சா­க­மாக உணர்ந்­தேன். இயக்­கு­நர் ஏ.எல்.விஜய் எப்­போ­தும் முழு சுதந்­தி­ரம் அளிப்­பார். அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­வது அலா­தி­யான அனு­ப­வம்,” என்­கி­றார் ஏமி.

“ஏறத்­தாழ 13 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ‘மத­ரா­ச­பட்­டி­னம்’ படத்­தில் நடிக்­கும் வாய்ப்பை இயக்­கு­நர் விஜய் வழங்­கி­ய­போது லண்­டன் பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­தேன். தமிழ் சினி­மா­வில் நடிக்­கும் உற்­சா­கத்­து­டன் கிளம்பி சென்­னையை அடைந்­தேன்.

“மொழி தெரி­யா­மல், நாடு கடந்து நடிக்க வந்­தி­ருக்­கும் ஒரு நடி­கைக்கு முதல் படமே சிறப்­பான பட­மாக அமை­வது பெரிய விஷ­யம். அந்த வகை­யில் நான் அதிர்ஷ்­ட­சாலி. இயக்­கு­நர் விஜய், ஆர்யா என்று அரு­மை­யான மனி­தர்­கள் எனக்கு நண்­பர்­க­ளாக வாய்த்­த­னர்.

“தமிழ் சினிமா, சென்னை, நடிப்பு என்று பல விஷ­யங்­களை எனக்கு கற்­றுக்­கொ­டுத்­தது அவர்­கள்­தான். அப்­போது கற்­றுக்­கொண்ட விஷ­யங்­கள்­தான் இப்­போது வரை உத­வி­யாக உள்­ளன,” என்று கடந்த காலத்தை திரும்­பிப்­பார்த்து மகிழ்­கி­றார் ஏமி.

ரஜி­னி­யு­டன் ‘2.0’ படத்­தில் நடித்த பின்­னர் லண்­டன் சென்­ற­வர், திரு­மணம் முடிந்து ஒரு குழந்­தைக்­கும் தாயா­கி­விட்­டார். இந்­நி­லை­யில், அவரை மீண்­டும் நடிக்க வைத்­துள்­ளார் விஜய்.

‘அச்­சம் என்­பது இல்­லையே’ படத்தில் சண்­டைக் காட்­சி­களும் உள்ள­ன­வாம். நவீன ரக துப்­பாக்­கியைக் கையில் ஏந்தி, எதி­ரி­களை சுட்டு வீழ்த்­தும் காட்­சி­களில் அசத்தி உள்­ளா­ராம் ஏமி.

“திடீ­ரென ஒரு­நாள் இயக்­கு­நர் விஜய் தொடர்­பு­கொண்டு பேசினார். எனக்­கேற்ற நல்ல கதா­பாத்­தி­ரம் இருப்­ப­தா­க­வும் உடனே சென்­னைக்கு வரவேண்­டும் என்­றும் கூறி­ய­தும் உடனே ஒப்புக்­கொண்டேன். கதை­யைக்­கூட கேட்­க­வில்லை. கார­ணம் அவர் மீதான நம்­பிக்கை. “சினி­மாவை எனக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது அவர்­தான். அவர் சொல்­வதை முழு­மை­யாக நம்­பு­வேன். இன்­று­வரை நல்ல நண்­ப­ராக நீடிக்­கி­றார். எந்­தப் பிரச்­சினை என்­றா­லும் அவ­ரி­டம் ஆலோ­சனை கேட்­பேன். தமிழ்ப் படங்­களில் நடிக்காத நேரங்­க­ளி­லும் அவ­ரு­டன் அடிக்­கடி பேசிக்­கொண்­டு­தான் இருந்­தேன்,” என்று சொல்­லும் ஏமி, இது­வரை சிறை அதி­காரி கதா­பாத்­தி­ரத்­தில் தாம் நடித்­த­தில்லை என்­கி­றார். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்­காக தற்­காப்­புக் கலை, குத்துச்சண்டை எனப் பல்­வேறு பயிற்­சி­களை மேற்­கொண்­டா­ராம். அருண் விஜய்­யு­டன் முதன்முத­லாக இணைந்து நடிக்­கி­றா­ராம்.

“அருண் விஜய் எளி­மை­யான மனி­தர். இயல்­பா­கப் பேசிப் பழ­கு­கி­றார். சண்­டைக் காட்­சி­களில் எப்­படி நடிக்க வேண்­டும் என கற்­றுக் கொடுத்­தார். இவ­ரைப் போன்ற கதா­நா­ய­கர்­களு­டன் இணைந்து நடிக்­கும்­போது நிறைய நுணுக்­கங்­க­ளைக் கற்­றுத்­தேற முடி­யும். மீண்டும் தமிழ்ப் படங்­களில் நடிக்­கும் ஆசை அதி­க­ரித்­துள்­ளது. நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் நடிப்­பேன்,” என்­கி­றார் ஏமி.

அனைத்­து­லக குற்­றத்­த­டுப்பு, பாதிக்­கப்­பட்­டோர் பாது­காப்பு அமைப்­பின் தூத­ரா­கச் செயல்­பட்டு வரும் அ­வர், பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் அதி­க­ரிப்­பது கவலை அளிப்­ப­தாகச் சொல்­கி­றார்.

“உல­கம் முழு­வ­தும் இந்­தப் பிரச்­சினை இருக்­கிறது. பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் குறித்து பேசு­வது பெரி­தல்ல. இது பெண்­க­ளுக்­கான பிரச்­சினை மட்­டு­மல்ல என்ற புரி­தல் ஏற்­ப­டு­வ­து­தான் முக்­கி­யம்.

“பெண்­க­ளுக்கு எதி­ராக நடக்­கும் அத்­தனை வன்­கொ­டு­மை­க­ளுக்­கும் ஆணா­திக்­கச் சமூ­கம்­தான் கார­ணம். சிறு வயது முதல் ஆண் குழந்­தை­களை எப்­படி வளர்க்­கி­றோம் அவர்­க­ளுக்கு என்­ன­வெல்­லாம் கற்­றுத் தருகி­றோம் என்­ப­தில்­தான் தீர்­வு­களும் அடங்கி உள்­ளன. ஆண் குழந்­தை­க­ளுக்கு மூன்று அல்­லது நான்கு வய­தா­கும்­போதே இரக்­கம், அன்பு, அனு­தா­பம், சமத்­து­வம் உள்­ளிட்ட அனைத்­தை­யும் கற்­றுத்­தர வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது,” என்கிறார் ஏமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!