மலேசியாவில் கொவிட்-19 தடுப்பூசிக்கான தேவை அதிகரிப்பு

1 mins read
56adcae4-1676-46dd-83e3-c3207596d386
மூத்தோர் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் அதிக அளவில் சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜார்ஜ் டவுன்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கொவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க மலேசிய மக்கள் பலர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொவிட்-19 தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

மூத்தோர் மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் அதிக அளவில் சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அண்டை நாடான தாய்லாந்தில் புதிய திரிபு கொண்ட கொவிட்-19 கிருமி பரவி வருவதால் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.

மலேசியாவில் கொவிட்-19 நிலைமை நிலையாக உள்ளது, இருப்பினும் தயார் நிலையில் இருப்பது அவசியமான ஒன்று என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பினாங்கில் விடுமுறைக் காலங்கள் அல்லது பண்டிகை நாள்களில் அதிக அளவில் மக்கள் சுற்றுலா, ஒன்றுகூடல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இதனால் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்பு அதிகரிக்கும்,” என்று பினாங்கின் சுகாதாரக் குழுவின் தலைவரான டேனியல் கூய் தெரிவித்தார்.

மேலும், வறண்ட வானிலை கொவிட்-19 கிருமித்தொற்றை அதிகரிக்கும் என்பதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பினாங் மாநிலத்தில் 1,594 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானது. இதில் யாரும் இறக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்