தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல் - ஈரான் போர் பற்றி முக்கிய தரப்புகளுடன் பேசிய அமெரிக்க அமைச்சர்

2 mins read
481f029b-ffa3-4023-985f-e98726d6c6c8
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்களுடன் இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வா‌ஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் குறித்து கலந்துரையாட பிரிட்டி‌ஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியைச் சந்தித்துள்ளார்.

அதோடு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-நொவெல் பெரட், இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ டஜானி ஆகியோரையும் திரு ரூபியோ சந்தித்துப் பேசினார்.

ஈரான் அணுவாயுதத்தை உருவாக்கவோ வைத்திருக்கவோ முடியாது என்று திரு ரூபியோவும் இதர வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு சொன்னது.

மத்திய கிழக்கு நிலவரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் அரசதந்திர தீர்வை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக திரு லேமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இதற்கிடையே, இம்மாதம் 13ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூண்ட போர் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது.

டெஹ்ரானை சமரசப் பேச்சுக்கு மீண்டும் கொண்டுவர ஐரோப்பிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

அமெரிக்கா அந்தப் போரில் ஈடுபடுமா என்று அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிபர் டோனல்ட் டிரம்ப் முடிவெடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

திரு டிரம்ப் தேசியப் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியது.

மத்திய கிழக்கில் அணுவாயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு என்று பரவலாக நம்பப்படும் இஸ்ரேல், ஈரான் சுயமாக அணுவாயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க அதன்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

தனது அணுவாயுதத் திட்டம் பயன்பாட்டிற்கானது என்ற ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது.

அணுவாயுதக் களைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

அணுவாயுதத் தளங்களையும் ஏவுகணை வசதிகளையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதோடு ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமானெய்யின் அரசாங்கத்தையும் இஸ்ரேல் தகர்க்க முற்பட்டதாக மேற்கத்திய, வட்டார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஈரான், இஸ்ரேலில் உள்ள ராணுவ, தற்காப்புத் தொடர்பான தளங்களைக் குறிவைத்து தாக்கியதாகக் கூறியது. ஆனால் அது ஒரு மருத்துவமனையையும் குடியிருப்பு வட்டாரங்களையும் தாக்கியது.

இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதல்களில் 639 பேர் மாண்டதாக மனித உரிமைகள் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஈரானியத் தாக்குதல்களில் குறைந்தது 20க்கும் அதிகமானோர் மாண்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள், போரைத் தணிப்பது குறித்து பேச ஈரானிய வெளியுறவு அமைச்சரை சந்திக்கவிருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்