ஒரே போட்டியில் இரண்டு குத்துச்சண்டை வீரர்கள் மரணம்

1 mins read
eabb611c-feb8-4be1-8042-e4b6273ab9bc
எதிர்பாராத விதமாய் மாண்ட இரண்டு ஆடவர்களுக்கும் 28 வயது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் குத்துச்சண்டை வீரர்கள் இருவர் பங்குபெற்ற குத்துச்சண்டைப் போட்டியின்போது மூளையில் காயம்பட்டதை அடுத்து அவர்கள் இறந்துவிட்டனர்.

சிகேடொஷி கொட்டாரி, ஹிரோமஸா உராக்காவா என்ற அந்த இலகு எடை குத்துச் சண்டை வீரர்கள் இருவருக்கும் 28 வயது. ஆகஸ்ட் 2ஆம் தேதி தோக்கியோவின் கொராகுவென் மண்டபத்தில் நடைபெற்ற ஒரே போட்டியில் பங்குபெற்றபோது அவ்வாறு நேர்ந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சண்டையின்போது காயமுற்ற அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு விரைந்து சேர்க்கப்பட்டனர்.

சக ஜப்பானிய குத்துச்சண்டை வீரர் யமாத்தோ ஹத்தாவுடன் 12 சுற்றுகள் மோதி சம அளவில் புள்ளிகளைப் பெற்ற கொட்டாரி, சண்டைக்குப் பிறகு நினைவிழந்ததாகவும் ஆகஸ்ட் இரவு 11 மணி வாக்கில் அவர் இறந்ததாகவும் அவர் பணியாற்றிய எம்.டி குத்துச்சண்டைப் பயிற்சிக்கூடம் தெரிவித்தது. 

அதேபோல், யோஜி சைத்தோ என்ற வீரருடன் மோதிய உராக்காவா, எட்டாவது சுற்றான இறுதி சுற்றில் வீழ்த்தப்பட்டு காயங்களால் இறந்ததாக உலக குத்துச்சண்ட அமைப்பு, தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்தது.

உராக்காவா சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குத்துச்சண்டைப் போட்டி நடந்த ஒரே இடத்தில் பங்கேற்ற இருவர், திறந்த மூளை அறுவை சிகிச்சைக்குச் செல்வது இதுவே முதல்முறை என்று ஜப்பானிய குத்துச்சண்டை ஆணையத்தின் நிரந்தரச் செயலாளர் சுயோஷி யாசுகோஷி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்