அங்காரா: அடுத்த ஆண்டு நடைபெறும் ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டைத் துருக்கி ஏற்று நடத்த இருக்கிறது.
மாநாட்டை ஏற்று நடத்த நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவைத் துருக்கி தோற்கடித்தது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம், துருக்கியின் சுற்றுலாத் தள நகரமான அன்டால்யாவில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மாநாட்டைத் துருக்கியில் நடத்துவது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உச்சநிலை மாநாட்டுக்குத் துருக்கி தலைமை தாங்கும் என்றும் பேச்சுவார்த்தைகளை ஆஸ்திரேலியா வழிநடத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, பணக்கார நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான பாலமாகத் துருக்கியால் செயல்பட முடியும் என்று துருக்கிய அதிபர் ரசெப் தயீப் எர்டோவான் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவது குறித்து அண்மை ஆண்டுகளாகப் பணக்கார நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
இந்நிலையில், 2053ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை எட்ட துருக்கி இலக்கு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை தொடர்பாக புதிய, தேசிய அளவிலான இலக்குகளை அது தயார் செய்து வருகிறது.

