தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க மத்திய வங்கி ஆளுநரைப் பதவிநீக்கம் செய்த டிரம்ப்

2 mins read
71624c07-f120-429c-b279-3c70299febd5
பதவிநீக்கம் செய்யப்பட்ட டாக்டர் லீசா குக். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர் லீசா குக்கை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவிநீக்கம் செய்துள்ளார்.

வீட்டுக் கடன்களைப் பெற டாக்டர் குக் நேர்மையற்ற வகையில் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மத்திய வங்கி தன்னிச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பாகும்.

திருவாட்டி லீசா தமது பதவிநீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அவ்வாறு நிகழ்வது அதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க மத்திய வங்கியின் இயக்குநர் சபையின் தலைவராகப் பதவி வகித்த முதல் கறுப்பின அமெரிக்கர் எனும் பெருமை டாக்டர் குக்கைச் சேரும்.

டாக்டர் குக்கைப் பதவிநீக்கம் செய்ய போதுமான காரணங்கள் இருப்பதாக அவருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

மிச்சிகனிலும் ஜார்ஜியாவிலும் உள்ள தமது வீடுகளுக்காக டாக்டர் குக் வீட்டுக் கடன் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு வீடுகளுக்கும் அவர் தனித்தனியே விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒருவருக்கு ஒரே முகவரி மட்டுமே முதன்மை முகவரியாக இருக்க முடியும்.

ஆனால் வீட்டுக் கடன் விண்ணப்பப் படிவங்களில் இரு வீடுகளையும் தமது முதன்மை முகவரியாக டாக்டர் குக் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மைப் பதவிநீக்கம் செய்ய அதிபர் டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை என்று டாக்டர் குக் வாதிட்டுள்ளார்.

அவரை மத்திய வங்கியின் ஆளுநராக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் 2022ஆம் ஆண்டில் நியமித்தார்.

“அமெரிக்கப் பொருளியலுக்கு உதவ கடமையாற்றுவதைத் தொடர்வேன்,” என்றார் டாக்டர் குக்.

அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகள் முறையற்றது என்றும் சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்றும் தமது வழக்கறிஞர் மூலம் டாக்டர் குக் தெரிவித்தார்.

பதவிநீக்கத்தைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் குக்கின் வழக்கறிஞர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்