தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழல் வழக்கு: சயீது சாதிக்கை விடுவித்த மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம்

1 mins read
71001d9f-4a07-4a16-a511-cc80c4d88967
மலேசியாவின் மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயீது சாதிக் குற்றமற்றவர் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை (ஜூன் 25) தீர்ப்பளித்தது. - படம்: பெரித்தா ஹரியான்

புத்ராஜெயா: மலேசியாவின் மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயீது சாதிக் சயீது அப்துல் ரஹ்மானை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது.

1.2 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ஊழலில் ஈடுபட்டதாக சயீது சாதிக் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சயீது சாதிக் குற்றமற்றவர் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை (ஜூன் 25) தீர்ப்பளித்தது.

யாருடைய தலையீடு இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது.

இதற்கு முன்பு, இந்த வழக்கு தொடர்பாக சயீது சாதிக் குற்றவாளி என மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்குத் தண்டனை விதித்திருந்தது.

தீர்ப்பை எதிர்த்து சயீது சாதிக் மேல்முறையீடு செய்தார்.

தற்போது அவர் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஊழல்வழக்குநாடாளுமன்ற உறுப்பினர்விடுவிப்பு