சட்டவிரோதமாக ஜோகூர் பாரு சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சிங்கப்பூர் காரை, எங்கிருந்தோ வந்த மற்றொரு கார் சாலைத் தடுப்பை திடீர் என மீறி மோதியது.
சிங்கப்பூரர்கள் அதிகமாகக் கூடும் பகுதியான ஜாலான் செராபாங்கில் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மதியம் 1.45 மணியளவில் நடந்தது. அதனை ‘எஸ்ஜி ரோட் விஜிலான்டெ’ என்ற சமூக ஊடகம் அதன் ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டது.
சாலை ஓரத்தில் இரட்டை மஞ்சள் கோடுகள் இடப்பட்டிருந்த இடத்தில் சட்டவிரோதமாக அந்த வெள்ளை நிற சிங்கப்பூர் கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. வாகனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதைக் காட்ட அதன் முன்புறம் இடதும் வலதும் உள்ள ‘ஹசார்ட் லைட்’ எச்சரிக்கை விளக்குகள் இயக்கப்பட்டிருந்தன.
பக்கத்தில் ஒரு ரொட்டிக் கடையும் உள்ளது. மலேசியப் பதிவு எண்ணைக்கொண்ட கறுப்பு நிறக்கார் ஒன்று ரொட்டிக்கடைக்கு வெளியில் இருந்த கார் நிறுத்தும் இடத்தை நோக்கி வந்தது. ஆனால் நிறுத்தத்துக்கான வெள்ளை எல்லைக் கோட்டைத் தாண்டி, அதன்பிறகு உள்ள சாலைத் தடுப்பையும் சாக்கடையையும் மீறி, முன்னே நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் காரின்மீது அது மோதியது,
சிங்கப்பூர் காரில் எவரும் இல்லாததுபோல் காணொளிக் காட்சியில் தெரிகிறது,