உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் இவ்வாரம் சீனா செல்வர்: தகவல்

1 mins read
adc53798-0b1b-45c5-b8bc-da8f48b06d63
படம்: - ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளைக் கொண்ட குழு இவ்வாரம் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் தெரிந்த இருவர் திங்கட்கிழமை (ஜூலை 28) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

அமெரிக்க-சீன வர்த்தக மன்றம் (யுஎஸ்சிபிசி) இப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த சீன அதிகாரிகளைச் சந்திக்க உயர்நிலை அமெரிக்க அதிகாரிகள், சீனா செல்வதாகத் தகவல் தெரிந்தவர்கள் ராய்ட்டர்சிடம் கூறினர்.

அமெரிக்காவும் சீனாவும் சுவீடனில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அதில் சீன துணைப் பிரதமர் ஹெ லிஃபெங், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் வரும் புதன்கிழமை (ஜூலை 30) வரை அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக, பொருளியல் தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

இத்தகைய சூழலில் உயர்நிலை அமெரிக்க அதிகாரிகள் சீனா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் குழுவுக்கு ஃபெட்எக்ஸ் (FedEx) தலைமை நிர்வாகி ராஜே‌ஷ் சுப்ரமணியம் தலைமை தாங்குவார் என்று தகவல் தெரிந்த இருவரில் ஒருவர் குறிப்பிட்டார்.

இச்செய்தியை சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் ஊடகம் முதலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. போயிங் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அமெரிக்கக் குழுவில் இடம்பெறுவர் என்று சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்