தற்காப்பு ஒப்பந்தம் குறித்து சவூதி, அமெரிக்கா பேச்சு

1 mins read
https://www.straitstimes.com/world/middle-east/saudi-arabia-in-talks-with-us-for-defence-pact-ft-reports
4af2cc71-180d-4868-acbc-a842f773e08b
சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து சவூதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 17) ஃபைனாஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான் அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அப்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக அது குறிப்பிட்டது.

அண்மையில், அமெரிக்காவுடன் கத்தார் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒத்து அது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, கத்தார்மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் அது அமெரிக்காவைத் தாக்குவது போன்றது என ஃபைனாஸ் டைம்ஸ் தெரிவித்தது.

மேலும், கடந்த மாதம் தோஹாமீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அதன்மூலம் ஹமாஸ் தலைவர்களைக் கொல்ல இஸ்ரேல் முயன்றதையடுத்து கத்தாரும் அமெரிக்காவும் தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன.

சவூதி உடனான இந்தத் தற்காப்பு உடன்பாடு எங்கள் வட்டார உத்தியின் வலுவான அடித்தளம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியதாக அந்த நாளிதழ் கூறியது.

இருப்பினும், ஒப்பந்தம் குறித்த விவரங்களை வெளியிட அமெரிக்க அமைச்சு மறுத்துவிட்டது என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்