80 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலித்து புத்துயிர் பெற்ற நாகாசாக்கி மணி

1 mins read
23f12078-7d16-456a-8b97-b4a4b688a585
நாகாசாக்கி மீது அணுகுண்டு வீழ்ந்தபோது பிரபல இம்மெக்யுலேட் கன்செப்‌‌ஷன் தேவாலயத்தின் மணிக்கூண்டுகள் தகர்க்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

நாகசாக்கி: ஜப்பானின் நாகாசாக்கி நகரில் அணுகுண்டு விழுந்து 80 ஆண்டுகளில் முதன்முறையாக அங்கிருக்கும் பிரபல தேவாலயத்தின் இரட்டை மணிகள் ஒலித்தன.

1945, ஆகஸ்ட் 9ஆம் தேதி. காலை 11.02 மணிக்கு அமெரிக்கா நாகாசாக்கிமீது அணுகுண்டை போட்டது. அந்தத் துக்ககரமான நாள் நாகசாக்கியில் அனுசரிக்கப்பட்டது. அதில் பிரபல இம்மெக்யுலேட் கன்செப்‌‌ஷன் தேவாலய மணிகள் ஒலித்தன.

சடங்குபூர்வ நிகழ்ச்சியில் உரையாற்றிய நாகாசாக்கி மேயர் ‌ஷிரோ சுஸுக்கி ஆயுதமேந்திய போரை உடன்படியாக நிறுத்தும்படி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டனார்.

“எண்பது ஆண்டுகள் கடந்த பிறகும் உலகம் இந்த நிலைக்கு வரும் என்று யார் நினைத்திருப்பார்? மனிதகுலத்தை அச்சுறுத்தும் அணுவாயுதம் இந்தப் பூமியில் வாழும் நம் ஒவ்வொருவரையும் அச்சுறுத்துகிறது,” என்றார் அவர்.

நாகாசாக்கி மீது அணுகுண்டு வீழ்ந்ததில் கிட்டத்தட்ட 74,000 கொல்லப்பட்டனர்.

அணுகுண்டு வீழ்ந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட சில நூறு மீட்டர் தொலைவில் மலை மேல் இரண்டு மணிக்கூண்டுகளுடன் இருந்த இம்மெக்யுலேட் கன்செப்‌‌ஷன் தேவாலயம் ஏறக்குறைய அழிந்தது.

தேவாலயத்தின் இரண்டு மணிகளில் ஒன்று மட்டும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டது.

தேவாலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் அளித்த நிதியின் மூலம் புதிய மணி உருவாக்கப்பட்டதோடு மணிக்கூண்டும் திரும்ப உருப்பெற்றது. அந்த இரண்டு மணிகளும் அணுகுண்டு விழுந்த அதே நேரத்தில் ஒலித்தன.

மணிகூண்டு மறுசீரமைக்கப்பட்டது மனிதநேயத்தின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது என்றார் தேவாலயத்தின் தலைமை சமயத் தலைவர் கெனிசி யமமூரா.

குறிப்புச் சொற்கள்