மினயேபொலிஸ்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செனட்டரையும் அவரது கணவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
57 வயது வேன்ஸ் லூதர் பொயல்ட்டர், காவல்துறை அதிகாரியைப் போல வேடமிட்டு இருவரையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று (ஜூன் 14) மெலிசா ஹோட்மனும் அவரது கணவர் மார்க்கும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து துப்பாக்கிக்காரரைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு செனட்டரான ஜான் ஹோஃப்மனையும் அவரது மனைவியையும் அவர்களது வீட்டில் பொயல்ட்டர் சுட்டுக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஹோஃப்மன் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.