நியூயார்க்: எம்ஆர்ஐ இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஆடவர் மாண்டுவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் நியூயார்க்கின் லாங் ஐலண்ட்டில் ஜூலை 16ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
காயமடைந்த அந்த 61 வயது ஆடவர் மறுநாள் (ஜூலை 17) மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த 61 வயது ஆடவர், எம்ஆர்ஐ அறைக்குள் நுழைந்தபோது கழுத்தில் பெரிய சங்கிலி அணிந்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்தசக்தி அவரை அதற்குள் இழுத்தது.
மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

