அயர்ன்மேன் சவாலில் தொகுதிக்காக 1 மில்லியன் ரிங்கிட் வென்ற மலேசிய எம்.பி.

1 mins read
b76281ba-334f-4bd9-b6d3-298c9329e1b9
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான். - படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

லங்காவி: அயர்ன்மேன் மலேசியா சவாலில் கலந்துகொண்ட மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தமது தொகுதிக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் வென்றார்.

ஜோகூரில் உள்ள முவார் தொகுதிக்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

‘அயர்ன்மேன்’ எனும் ‘டிரையத்லான்’ (மூன்று வகையான விளையாட்டு) போட்டியின் பந்தய தூரத்தை 13 மணி நேரத்தில் திரு சையத் கடந்தால், அவரது தொகுதியில் சமூகநலப் பணிகள் மேற்கொள்வதற்காக 1 மில்லியன் ரிங்கிட் அளிப்பதாக மலேசிய நிறுவனமான ‘ஃப்ரிமாலெட்’ அறிவித்திருந்தது.

அந்நிறுவனம் நிர்ணயித்த நேரத்திற்கு முன்னதாகவே, அதாவது 12 மணி 22 நிமிடங்கள் 18 வினாடிகளில் அவர் பந்தய தூரத்தைக் கடந்தார்.

என் தொகுதி மக்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட்டை வென்றிட வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு தாம் அப்போட்டியில் கலந்துகொண்டதாகத் திரு சையத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநிதிநாடாளுமன்ற உறுப்பினர்