பசுமை இலக்கை நோக்கி ஜூரோங் தீவு

2 mins read
c4216fd1-1029-45af-be40-d0d913a348f8
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எரிசக்தித் துறையும் வேதியியல் துறையும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. - படம்: எக்சான்மொபில்

கரிம வெளியேற்றத்தைக் குறிப்பாக எண்ணெய், வேதியியல் துறைகள் குறைப்பது, சிங்கப்பூரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியம். எனவே அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, ஜூரோங் தீவில் செயல்படும் அந்த இரு துறைகள் சார்ந்த நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டில் மாற்றங்களைச் செய்துவருகின்றன.

பசுமையான எரிபொருளை சேமித்துவைப்பதற்கென உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை அங்கு இயங்கும் நிறுவனங்கள் செய்துள்ளன.

உலகளவில் பருவநிலை விதிமுறைகள் கடினமாகும் சூழலில் நீடித்துநிலைக்கக்கூடிய பொருள்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது. அதனால் கரிம வெளியேற்றத்துக்கான அவசியம் அதிகரித்துள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகமும், ஜூரோங் நகராண்மைக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தன.

உதாரணமாக, பெரிய அளவில் கரிமத்தை வெளியேற்றும் நிறுவனங்களுக்கான வரிகள், உயர்ந்துகொண்டே உள்ளன. தற்போது ஒரு டன் அளவுக்கு $25 என விதிக்கப்படும் வரி, 2030ஆம் ஆண்டுக்குள் $80 ஆக அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அதனால், அரசாங்கத்தின் இலக்குகளை அடைய, ‘அட்வாரியோ’ போன்ற நிறுவனங்கள் குறைவான கரிம வெளியேற்றத்தைக் கொண்ட விமான எரிபொருளுக்கான உள்கட்டமைப்பை ஜூரோங் தீவில் அமைத்துவருகின்றன.

நீடித்த நிலைத்தன்மையான பொருள்கள் தயாரிப்பிலும் எரிபொருள் உற்பத்தி ஆற்றலிலும் ஜூரோங் தீவு அதிக கவனம் செலுத்துகிறது. நிலைத்தன்மைக்கான சிறந்த நடுவமாக விளங்கவிரும்பும் சிங்கப்பூரின் இலக்கினை அடைய ஜேடிசி அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

பசுமையை நோக்கி சிங்கப்பூர் பயணிக்கும் வேளையில் பல சவால்களை அது எதிர்நோக்குகிறது. திறன்களை மறுவடிவமைப்பது, வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத்துக்கேற்ப செயல்படுவது போன்ற பலவற்றை பசுமை எரிபொருள் தயாரிப்பு முன்வைக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பிட்ட வகையில் கரிம வெளியேற்றத்தை ஏற்படுத்தி தயாரிக்கப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தை செயல்படுத்துகிறது. அதனால் சிங்கப்பூரில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்