ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 200 கிலோ எடையுள்ள ஆடவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஆனால் அவரால் ஆம்புலன்சுக்குச் சுயமாக நடந்து செல்ல முடியவில்லை.
இதையடுத்து, ஸ்கூடாய் தீயணைப்பு, மீட்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
புதன்கிழமை (ஜூன் 18) இரவு 10.49 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக தீயணைப்புத்துறையின் தலைவர் சைஃபுல்பாரி சஃபர் தெரிவித்தார்.
பத்து பேர் கொண்ட குழு அந்த ஆடவருக்கு உதவியது.
அந்த 46 வயது ஆடவருக்கு ஆஸ்துமா காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.
அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவரை தீயணைப்பாளர்கள் தூக்கி, வேறொரு படுக்கைக்கு இடம் மாற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு அவரைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டில் இறங்கினர்.
ஆடவரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அவரது உடல் படுக்கை விரிப்புகளாலும் கம்பளங்களாலும் மூடப்பட்டிருந்தது.
காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அந்த ஆடவர் சுல்தான் அமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.